கடன் வாங்கிய நாடுகள் இதுவரை மீள கடன் செலுத்தும் காலவரையறைகளை நிர்ணயிக்கவில்லை - சுரேஷ் பிரேமச்சந்திரன் (video)
கடன் வாங்கிய நாடுகள் இது வரை மீள கடன் செலுத்தும் காலவரையறைகள் நிர்ணயிக்கப்படவில்லை என ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணியின் தலைவரும், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான சுரேஷ் பிரேமச்சந்திரன் தெரிவித்துள்ளார்.
ஊடக சந்திப்பொன்றில் வைத்து அவர் இந்த விடயத்தினை தெரிவித்துள்ளார்.
மேலும் தெரிவிக்கையில், அரசாங்கம் எதிர்பார்க்கும் கடன்கள் இந்த மாதம் அல்லது ஜனவரி மாதத்தில் கிடைக்குமா என்ற கேள்விகள் எழுந்துள்ளன.
இந்நிலையில் மின்சார அமைச்சு மின்சார கட்டணங்களை அதிகரிக்கவுள்ளதாக தெரிவித்துள்ளது. இதனால் பாதிப்பது பொது மக்கள் மட்டுமே.
எனவே இத்தகைய செயற்பாடுகளினால் இலங்கையின் பொருளாதாரம் பாரியளவில் வீழ்ச்சியடைத்தமையால் பணவீக்கம் அதிகரிக்கப்பட்டுள்ளது.
வருமானங்கள்
மக்களின் நாளாந்த வாழ்க்கைக்கான வருமானம், அரச அதிகாரிகளின் சம்பளம், கூலித்தொழிலாளர்களின் சம்பளமும் அதிகரிக்கப்படவில்லை.
எனவே இத்தகைய நிலையில் வருமானங்களை விட செலவீனங்களே மக்கள் மத்தியில் திணிக்கப்பட்டு வருகின்றது என தெரிவித்துள்ளார்.

விமானங்களில் இருந்து தப்பித்து எதிரிப் பகுதிக்குள் விழும் விமானிகள் ஏன் தாக்கப்படுவதில்லை? News Lankasri
