எதிர்ப்புக்கு மத்தியிலும் தொடர்ந்தும் பதவியில் இருப்பேன்: போரிஸ் ஜான்சன்
போரிஸ் ஜான்சன் தனது தலைமைக்கு எதிராக வளர்ந்து வரும் கிளர்ச்சிக்கு மத்தியிலும் தான் பதவியில் நீடிப்பேன் என்று வலியுறுத்தியுள்ளார்.
2019 தேர்தலில் இருந்து தனக்கு "மகத்தான ஆணை" இருப்பதாகவும், "தொடர்ந்து தொடருவேன்" என்றும் தெரிவித்துள்ளார்.
இங்கிலாந்தில், ஏற்கனவே 2 அமைச்சர்கள் தங்கள் பதவிகளை இராஜினாமா செய்துள்ளநிலையில், தற்போது மேலும் 2 அமைச்சர்கள் இராஜினாமா செய்துள்ளனர்.
இதனால் போரிஸ் ஜான்சன் தலைமையிலாள அரசாங்கத்திற்கு எதிர்ப்புக்கள் அதிகரித்துள்ளன. போரிஸ் ஜான்சன் தலைமையிலான பழமைவாத கட்சியின் ஆட்சி நடந்து கொண்டிருக்கிறது. அந்தக் கட்சியின் துணை கொறடாவாக எம்பி, கிறிஸ் பின்ஷர் என்பவர் செயல்பட்டு வந்தார்.
பாலியல் ரீதியான குற்றச்சாட்டு
இந்நிலையில், கிறிஸ் மீது கிளப் ஒன்றில் 2 ஆண்களிடம் பாலியல் ரீதியில் கிறிஸ் அநாகரிகமாக செயல்பட்டதாக குற்றச்சாட்டுகள் எழுந்தன.
இதையடுத்து கிறிஸ் கட்சியின் துணை கொறடா பதவியில் இருந்து ராஜினாமா செய்தார். பிரதமர் போரிஸ் ஜான்சன் சரியான நேரத்தில் உரிய நடவடிக்கை எடுக்கவில்லை என்று குற்றச்சாட்டுக்களும் எழுந்தன.
எதிர்ப்பு
கிறிஸ் மீதான பாலியல் குற்றச்சாட்டுகள் தொடர்பான விவகாரத்தை போரிஸ் ஜான்சன் அரசு சரிவர கையாளவில்லை என்று சொல்லி பின்னர், இங்கிலாந்து நிதியமைச்சர் ரிஷி சுனக், சுகாதாரத்துறை அமைச்சர் சஜித் ஜாவித் ஆகியோர் தங்கள் பதவியை ராஜினாமா செய்தனர்.
இந்த ராஜினாமா சம்பவம் பிரித்தானிய அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.
விளாடிமிர் புடினிடம் கோட்டாபய ராஜபக்ச முன்வைத்த கோரிக்கை |