விளாடிமிர் புடினிடம் கோட்டாபய ராஜபக்ச முன்வைத்த கோரிக்கை
இலங்கையில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடிக்கு மத்தியில், எரிபொருளை இறக்குமதி செய்ய, ரஷ்யாவிடம் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடினிடம் இந்த கடனுதவியை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச இன்று கோரியுள்ளார்.
தனது உத்தியோகபூர்வ ட்விட்டரில் பதிவிலே ஜனாதிபதி கோட்டாபய இது தொடர்பில் தகவல் வெளியிட்டுள்ளார்.
1/2
— Gotabaya Rajapaksa (@GotabayaR) July 6, 2022
Had a very productive telecon with the #Russia President, Vladimir Putin. While thanking him for all the support extended by his gvt to overcome the challenges of the past, I requested an offer of credit support to import fuel to #lka in defeating the current econ challenges.
பயனுள்ள தொலைபேசி உரையாடல்
ரஷ்ய ஜனாதிபதியுடன் மிகவும் பயனுள்ள தொலைபேசி உரையாடலை மேற்கொண்டதாகக் கூறியுள்ளார். இதன்போது, சுற்றுலா, வர்த்தகம் மற்றும் கலாசாரம் போன்ற துறைகளில் இருதரப்பு உறவுகளை வலுப்படுத்துவது இரு நாடுகளுக்கு இடையேயான நட்புறவை வலுப்படுத்துவதில் மிக முக்கியமானது என்பதை இருவரும் ஏற்றுக்கொண்டதாக ஜனாதிபதி குறிப்பிட்டுள்ளார்.
இலங்கையில் மீண்டும் ரஷ்ய விமான சேவைகள்
இதன்போது, ரஷ்ய விமான நிறுவனமான ஏரோஃப்ளோட்டின் இலங்கைக்கான விமான நடவடிக்கைகளை மீண்டும் ஆரம்பிக்குமாறு ஜனாதிபதி புடினிடம் ஜனாதிபதி ராஜபக்ச வேண்டுகோள் விடுத்துள்ளார்.