போரா சமூக மாநாடு: கடுமையாக்கப்பட்டுள்ள பாதுகாப்பு ஏற்பாடுகள்
உலகெங்கிலும் இருந்து ஆயிரக்கணக்கான, போரா சமூக உறுப்பினர்கள், இலங்கையில் நடைபெறும் ஆன்மீக மாநாட்டிற்காக வருகை தந்துள்ளனர்.
இதேவேளை, 2025 ஜூன் 27 முதல் ஆரம்பமான இந்த நிகழ்வு, ஜூலை 5 ஆம் திகதி வரை நடைபெறவுள்ளது.
சிறப்பு போக்குவரத்து
கொழும்பு 3 பம்பலப்பிட்டியில் அமைந்துள்ள போரா சமூகத்தின் பள்ளிவாசல் மற்றும் இலங்கை கண்காட்சி மாநாட்டு மண்டபம் ஆகிய இடங்களில், போரா சமூகத்தின் ஆன்மீக சபை நிகழ்வு மற்றும் மாநாடு ஆகியன நடைபெறுகின்றன.

இதனை முன்னிட்டு கடுமையான பாதுகாப்பு மற்றும் சிறப்பு போக்குவரத்து ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
போரா சமூகத்தின் ஆன்மீகத் தலைவர், புனித சையத்னா முஃபத்தல் சைஃபுதீன் சாஹிப்பும்,( Syedna Mufaddal Saifuddin Sahib) இந்த மாநாட்டில் பங்கேற்பதற்காக கொழும்பிற்கு வருகை தருவார் என எதிர்பார்க்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
ரஷ்யாவிற்காக வேறு நாட்டில் நாசவேலையில் இறங்கிய உக்ரேனியர்கள்: பகிரங்கப்படுத்திய பிரதமர் News Lankasri