அரசாங்கம் அரசியல் ரீதியான நியமனங்களை வழங்குகின்றது
அரசாங்கம் அரசியல் ரீதியான நியமனங்களை வழங்குவதாக முன்னாள் அமைச்சர் சம்பிக்க ரணவக்க குற்றம் சுமத்தியுள்ளார்.
அரச சேவையை அரசியல்மயமற்றதாக மாற்றுவோம் என உறுதுமொழி வழங்கி ஆட்சி பீடம் ஏறிய அரசாங்கம் பிழையான பாதையில் பயணிப்பதாகத் தெரிவித்துள்ளார்.
நிதி அமைச்சின் செயலாளர் பதவிக்கு கலாநிதி ஹர்ஷன சூரியப்பெரும நியமிக்கப்பட்டமை ஓர் பிழையான முன்னுதாரணம் என சம்பிக்க ரணவக்க தெரிவித்துள்ளார்.

மக்கள் விடுதலை முன்னிணியின் உறுப்பினராக ஹர்ஷன, பங்குச் சந்தை நடவடிக்கை முறைகேடுகள் குறித்து குற்றம் சுமத்தப்பட்ட ஒருவர் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
நிதி அமைச்சின் செயலாளர் பதவியை வகிப்பதற்கு ஹர்ஷனவிற்கு தகுதியும் திறமையும் கிடையாது என்பது சில மாதங்களில் வெளிப்படும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
இந்த விடயம் முழு நிதி அமைச்சிற்குமே நன்றாகத் தெரியும் என அவர் தெரிவித்துள்ளார்.
நிதி அமைச்சில் அல்லது அரச சேவையில் நிதிய அமைச்சின் செயலாளர் பதவியை வகிக்கக் கூடிய தகுதியானவர்கள் எவரும் இல்லையா என சம்பிக்க கேள்வி எழுப்பியுள்ளார்.
145 ஓட்டங்கள் கொடுத்து 1 விக்கெட் எடுத்த அர்ஜுன் டெண்டுல்கர்: 585 ஓட்டங்கள் விளாசிய எதிரணி News Lankasri