கடவுச்சீட்டு குறித்து பிரித்தானிய பயணிகளுக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை..!
பிரித்தானியாவில் இருந்து வெளியேறிய பின் (Brexit), ஐரோப்பிய ஒன்றிய நாடுகளுக்குப் பயணிக்க விரம்புவோருக்கு நடைமுறையில் உள்ள புதிய விதிமுறைகள் குறித்து தகவல்கள் வெளியாகியுள்ளன.
இதன்படி, தற்போது ஒரு முக்கியமான கடவுச்சீட்டு எச்சரிக்கையை பிரித்தானிய பயணிகள் அறிந்திருக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.
புதிய விதிமுறைகள்
அந்தவகையில், “பிரித்தானியாவில் கடவுச்சீட்டு 10 ஆண்டுகளுக்கும் மேலாக நீட்டிக்கப்படலாம். ஆனால் நீங்கள் ஐரோப்பிய ஒன்றிய (EU) நாடுகளுக்குள் செல்ல முயற்சிக்கிறீர்கள் என்றால், உங்கள் கடவுச்சீட்டு 10 ஆண்டுகளைக் கடந்திருந்தால் அனுமதிக்கப்பட மாட்டீர்கள்” என தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதாவது, பயனரின் கடவுச்சீட்டு 10 ஆண்டுகள் கடந்திருந்தால் ஐரோப்பிய ஒன்றிய நுழைவு நிராகரிக்கப்படும்.
மேலும், பயனர் ஐரோப்பிய ஒன்றிய நாடுகளை விட்டு திரும்பும் மூன்று மாதங்களுக்கு முன் கடவுச்சீட்டு செல்லுபடியாக இருக்க வேண்டும்.
இந்த எச்சரிக்கையை புறக்கணித்தால், விமான நிலையத்தில் நுழைய கூட முடியாமல் விடுமுறை திட்டம் முழுமையாக கெட்டுப்போகும் அபாயம் உள்ளது.
ஆகவே, யாரும் இத்தகைய தவறை செய்யாமல், கடவுச்சீட்டு செல்லுபடிக்கு முன்கூட்டியே சரிபார்த்துக்கொள்ளவும், தேவைப்பட்டால் புதியது பெற்று பயணிக்கவும் என்று எச்சரிக்கப்பட்டுள்ளது.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
டிசம்பர் 6 இந்தியாவின் 4 நகரங்களில் குண்டு வெடிப்புக்கு திட்டம் - விசாரணையில் அதிர்ச்சி தகவல் News Lankasri