செம்மணி படுகொலை குறித்த ஐ.நா அதிகாரியின் அறிக்கை ஆரோக்கியமற்றது - அப்துல்லா மஹ்ரூப்
ஐக்கிய நாடுகள் சபையினுடைய மனித உரிமைகள் ஆணையாளர் வருகையின் போது நீண்டகாலமாக புரையோடி போய்க்கிடக்கின்ற செம்மணி படுகொலை சம்பந்தமாக தமிழ் தலைமைகள் விரிவாக பேசிய போதும் அவர் நாட்டை விட்டு செல்கின்ற போது சொல்லியிருக்கின்ற அறிக்கை அவ்வளவு ஆரோக்கியமானதாக இல்லை என முன்னாள் திருகோணமலை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் அப்துல்லா மஹ்ரூப் தெரிவித்தார்.
கிண்ணியாவில் உள்ள அவரது இல்லத்தில் இன்று (29) இடம்பெற்ற ஊடக சந்திப்பின் போதே மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
உரிய தீர்வு
அவர் தொடர்ந்தும் தெரிவிக்கையில், "இஸ்ரேலிய கொடும் கோலர்களால் சிறு குழந்தைகளும், பெண்களும் மருத்துவமனை தாக்கப்பட்டு கொல்லப்பட்டு இருக்கின்ற போதும் அது தொடர்பில் எந்த ஒரு முன்னெடுப்பையும் எடுக்காத ஒரு ஆணையாளரால் செம்மணி தொடர்பான தீர்வு கிடைக்கும் என்பதில் நம்பிக்கை இல்லை.

ஏற்கனவே நவநீதன் பிள்ளை, செம்மணி தொடர்பாக நட்ட ஈடு வழங்குவது தொடர்பாக அதன் உண்மை தன்மை தொடர்பாக மிக விரிவான அறிக்கையை வெளியிட்டுள்ளார்.
இஸ்ரேலியர்களால் காசா மக்கள் கொல்லப்படுவதை இவர்களால் கண்டிக்கவோ அறிக்கை விடவோ முடியாத போது எவ்வாறு செம்மணிக்கு தீர்வு கிடைக்கும் என்பதில் எனக்கு நம்பிக்கை இல்லை" என குறிப்பிட்டுள்ளார்.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
நோர்ட் ஸ்ட்ரீம் எரிவாயு குழாய் வெடிக்க வைத்த உக்ரைனியர்: ஜேர்மனி எடுத்துள்ள அதிரடி முடிவு News Lankasri
பிரித்தானிய வரலாற்றில் நடந்த மிகப்பெரிய கொடுமை., தாய்மார்களிடம் மன்னிப்பு கேட்ட பிரதமர் News Lankasri
என்னை கடத்திட்டு போயிட்டாங்க.. ஜேசன் சஞ்சய் வீடியோ வைரல்! என்ன சொல்லி இருக்கிறார் பாருங்க Cineulagam
சட்டவிரோதமாக வெளியான விஜய்யின் ஜனநாயகன் படத்தை இத்தனை கோடி பேர் பார்த்துள்ளார்களா?... ஷாக்கிங் தகவல் Cineulagam