டமாஸ்கஸில் தொடர் குண்டுவெடிப்புகள்: சவால்களை எதிர்கொள்ளும் புதிய சிரிய அரசு
சிரியாவில் ஆசாத் ஆட்சி வீழ்ந்து ஒன்றரை ஆண்டுகள் நிறைவடைந்துள்ள நிலையில், நாட்டின் தலைநகரான டமாஸ்கஸில் கடந்த ஒரு வாரத்தில் மட்டும் மூன்று சக்திவாய்ந்த குண்டுவெடிப்புகள் நிகழ்ந்துள்ளன.
ஜூலை 2ஆம் திகதி நீதிமன்ற வளாகத்திற்கு அருகில் உள்ள ஒரு உணவகத்தில் நடந்த வெடிவிபத்தில் 10 பேர் கொல்லப்பட்டனர்.
அதனைத் தொடர்ந்து, ஜூலை 7 ஆம் திகதி பிரான்ஸ் ஜனாதிபதி இம்மானுவேல் மக்ரோன் தங்கியிருந்த ஃபோர் சீசன்ஸ் ஹோட்டலுக்கு அருகே நிகழ்ந்த இரட்டைத் தாக்குதலில் ஒருவர் உயிரிழந்தார் மற்றும் 36 பேர் காயமடைந்தனர்.
நீர்கொழும்பு சிறை கலவரம்! 48 மணிநேரம் அமைதி காத்த அநுர அரசாங்கம் - பின்னணி குறித்து நாமலுக்கு சந்தேகம்
புதிய அரசு
இந்தத் தாக்குதல்களுக்குப் பொறுப்பான ஐஎஸ்ஐஎல் பயங்கரவாதக் குழுவைச் சேர்ந்த ஒரு கும்பலைத் தங்களின் கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவந்துள்ளதாக சிரியாவின் உள்துறை அமைச்சர் அனாஸ் கத்தாப் தெரிவித்துள்ளார்.

நீண்டகாலப் போருக்குப் பிறகு சிரியாவின் பொருளாதாரம், மின்சாரம் மற்றும் உள்கட்டமைப்புகள் முற்றிலும் சிதைந்துள்ள சூழலில், புதிய அரசுக்கு இந்தத் தொடர் குண்டுவெடிப்புகள் பெரும் பாதுகாப்புச் சவாலாக உருவெடுத்துள்ளன.
முன்னாள் ஆசாத் ஆட்சியின் முக்கியப் புள்ளிகள் மீதான உயர்மட்ட விசாரணைகள் டமாஸ்கஸ் நீதிமன்றத்தில் நடந்துவரும் வேளையில், இந்தத் தாக்குதல்கள் திட்டமிட்டு நடத்தப்பட்டுள்ளன.
இருப்பினும், இது சிரியாவின் ஒட்டுமொத்த பாதுகாப்புச் சீர்குலைவு அல்ல என்றும், நாட்டின் ஸ்திரத்தன்மையை உலகிற்குத் தவறாகக் காட்டுவதற்காகவே பயங்கரவாதிகள் இத்தகைய தாக்குதல்களை நடத்துவதாகவும் பாதுகாப்பு ஆய்வாளர்கள் கருதுகின்றனர்.
பல வருடங்களாகப் போர்க் குண்டுகளுக்கு இடையே பழகிப்போன டமாஸ்கஸ் மக்கள், இந்த அச்சத்திற்கு மத்தியிலும் தங்களின் வாழ்வாதாரத்திற்காகத் தினசரி வாழ்க்கையைத் தொடர்ந்து நகர்த்தி வருகின்றனர்.
ஒன்லைன் விசா வழங்க தனியார் நிறுவனங்களுக்கு முந்தைய அரசு அனுமதி..! நீதிமன்றத்தில் சூடுபிடிக்கும் வாதம்