நீர்கொழும்பு சிறை கலவரம்! 48 மணிநேரம் அமைதி காத்த அநுர அரசாங்கம் - பின்னணி குறித்து நாமலுக்கு சந்தேகம்
நீர்கொழும்பு சிறைச்சாலை கலவரத்தின் பின்னர் 24 முதல் 48 மணித்தியாலங்கள் வரை அரசாங்கம் எவ்வித நடவடிக்கையும் எடுக்காமல் அமைதி காத்தமை தொடர்பில் எமக்கு சந்தேகம் நிலவுகின்றது என்று பொதுஜன பெரமுன கட்சியின் தேசிய அமைப்பாளர் நாமல் ராஜபக்ச தெரிவித்துள்ளார்.
நேற்றையதினம் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்டு கருத்துத் தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
எமக்கு சந்தேகம்..
தொடர்ந்தும் தெரிவிக்கையில்,
இந்த அரசாங்கம் க்ளீன் ஸ்ரீ லங்கா திட்டத்திற்காக இளைஞர்களை காரணம் எதுவுமின்றி சிறைகளில் அடைத்து வருகின்றது.
சிறையில் இருக்கக் கூடிய போதைப்பொருளுக்கு அடிமையானவர்களை புனர்வாழ்வுக்கு உட்படுத்த வேண்டுமே தவிர அவர்களை சிறையில் அடைப்பது சாத்தியமற்றது.
11 ஆயிரம் கைதிகள் மாத்திரம் அனுமதிக்கக் கூடிய சிறைச்சாலைகளில் மிக அதிகளவிலானோரை அடைத்து வைத்துள்ளதோடு, அவர்களை கண்காணிப்பதற்கு மிகக் குறைந்த அளவிலான பொலிஸ் அதிகாரிகளையே நியமித்துள்ளனர். இதன் காரணமாக சிறைச்சாலையின் பாதுகாப்பு பலவீனமடைந்துள்ளது.

கிட்டத்தட்ட 30 உயிர்களைக் காவு கொள்ளும் அளவுக்கு ஒரு மோதல் வெடிக்கும் வரை அரசாங்கத்தின் உளவுத் துறை என்ன செய்தது. சம்பவத்தின் போது உடனடி உத்தரவுகள் எவையும் பிறப்பிக்கப்படவில்லை. இதற்குக் காரணம் என்ன. தமக்கு எந்த உத்தரவும் கிடைக்கவில்லை என்று அதிகாரிகள் அமைச்சரிடத்திலேயே தெரிவிக்கின்றனர்.
அத்துடன் சம்பவம் நடந்த 48 மணித்தியாலங்கள் வரை எவ்வித நடவடிக்கையும் எடுக்காமல் அரசாங்கம் மௌனமாகவே இருந்தது. இதுகுறித்து எமக்கு பலத்த சந்தேகம் உள்ளது என குறிப்பிட்டுள்ளார்.
YOU MAY LIKE THIS VIDEO
3 கிரகங்களின் அரிய சேர்க்கையால் உருவாகும் திரிகிரக யோகம்: இந்த ராசிகளுக்கு பொற்காலம் ஆரம்பம்! Manithan
மிகப்பெரிய நபரை குளிப்பாட்டி, கேக் வெட்டி பிறந்தநாளை கொண்டாடிய சீரியல் நடிகை ஷோபனா... வீடியோ இதோ Cineulagam