ஐரோப்பாவில் பல விமானங்களுக்கு வெடிகுண்டு அச்சுறுத்தல்
ஐரோப்பாவின் பல்வேறு நாடுகளுக்கு சென்ற விமானங்களுக்கு தொடர் வெடிகுண்டு அச்சுறுத்தல்கள் விடுக்கப்பட்டதைத் தொடர்ந்து, ரோமில் தரையிறங்கிய இரண்டு Ryanair விமானங்கள் தீவிர சோதனைக்கு உட்படுத்தப்பட்டுள்ளன.
டப்ளினில் இருந்து வந்த ஒரு விமானம் இத்தாலிய விமானப்படையின் பாதுகாப்புடன் அழைத்துச் செல்லப்பட்டது.
அவசரமாக தரையிறக்கம்
லண்டன் ஹீத்ரோவில் இருந்து புறப்பட்ட விமானம் உட்பட இரண்டு விமானங்கள் போலந்தின் வார்சாவில் சோதனை செய்யப்பட்டன.
மன்செஸ்டரில் இருந்து சென்ற விமானம் ஸ்பெயினின் முர்சியா விமான நிலையத்தில் சோதனை செய்யப்பட்டது.

அதில் வெடிபொருட்கள் எதுவும் கண்டறியப்படவில்லை. முன்னதாக, லண்டன் லூட்டனில் இருந்து சோஃபியாவுக்குச் சென்ற விமானம் வெடிகுண்டு அச்சுறுத்தலை தொடர்ந்து ஹங்கேரியின் புடாபெஸ்டில் அவசரமாகத் தரையிறக்கப்பட்டது.
தொடர் அச்சுறுத்தல்களை தொடர்ந்து ஐரோப்பிய விமான நிலையங்களில் பாதுகாப்பு நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.