அமெரிக்கா நோக்கிப் பயணித்த இந்திய விமானம் அவசரமாகத் தரையிறக்கம்
மும்பையில் இருந்து நியூயார்க்கிற்குச் சென்ற எயார் இந்தியா விமானம் அவசரமாகத் தரையிறக்கப்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
குறித்த விமானத்திற்கு வெடி குண்டு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளதையடுத்து அவசரமாகத் தரையிறக்கப்பட்டுள்ளது.
இந்தநிலையில் ,19 பணியாளர்கள் உட்பட 322 பேரை ஏற்றிச் சென்ற போயிங் 777-300 ER விமானம் சத்ரபதி சிவாஜி மகாராஜ் சர்வதேச விமான நிலையத்தில் (CSMIA) பாதுகாப்பாக தரையிறக்கப்பட்டு சோதனை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
வெடிகுண்டு மிரட்டல்
விமானத்தின் கழிப்பறைகளில் ஒன்றில் வெடிகுண்டு மிரட்டல் தொடர்பான குறிப்பொன்று கண்டுபிடிக்கப்பட்ட நிலையில் இந்த உடன் நடவடிக்கையை விமானக் குழுவினர் எடுத்துள்ளனர்.
இந்த நிலையில், பாதுகாப்பு நிறுவனங்கள் விமானத்தை முழுமையாக ஆய்வு செய்து வருவதுடன் பயணிகள் தேவையான பாதுகாப்பு சோதனைகளுக்கு உட்படுத்தப்பட்டு வருகின்றர்.
எவ்வாறாயினும் விசாரணைகளின் போது இந்த தகவல் போலியானது எனத் தெரியவந்துள்ளதுடன் சம்பவம் தொடர்பில் அந்த நாட்டு அதிகாரிகள் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |

CSK மேட்ச் பார்க்க வந்தபோது அஜித் அணிந்துவந்த வாட்ச் விலை எவ்வளவு தெரியுமா?.. இத்தனை லட்சமா? Cineulagam
