E-சிகரெட் பயன்படுத்துவோருக்கு வெளியான எச்சரிக்கை
E-சிகரெட்டுகளைப் பயன்படுத்துபவர்களைக் கைது செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் என மதுவரித் திணைக்களம் அறிவித்துள்ளது.
வேப்பிங் அல்லது E-சிகரெட்டுகள் சட்டவிரோதமானது என்று நாடாளுமன்ற நிதிக்குழுவில் தெரிய வந்துள்ளது.
இந்த விடயத்தினை கருத்திற் கொண்டு ஒரு திட்டம் தற்போது உருவாக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
சிகரெட் வரி
இதற்கிடையில், ஏப்ரல் முதலாம் திகதி முதல் சிகரெட்டுகளுக்கு விதிக்கப்படும் நிறுவன வருமான வரியை 45% ஆக அதிகரிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.
இலங்கையில் சிகரெட் வரி படிப்படியாகக் குறைந்து வருவதாக தெரிவித்த பொது நிதி பற்றிய குழுவின் தலைவர் ஹர்ஷ டி சில்வா, சிகரெட்டுகள் மீதான வரியை அதிகரிக்க எடுக்கப்பட்ட நடவடிக்கைகளை நியாயப்படுத்துவதற்கான வழிமுறைகள் தொடர்பிலும் ஆலோசனை வழங்கினார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |





பிரித்தானியாவில் ட்ரம்பின் வரலாற்று சிறப்புமிக்க பயணம்: கேட்டைப் பார்த்து அவர் கூறிய வார்த்தை News Lankasri

உலகின் சக்தி வாய்ந்த கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணைகள் - முதலிடத்தில் உள்ள நாடு எது? News Lankasri
