பாகிஸ்தானில் பாடசாலை பேருந்து மீது நடத்தப்பட்ட பயங்கர தாக்குதல்
பாகிஸ்தானின் பலுசிஸ்தான் மாகாணத்தில் பாடசாலை பேருந்து ஒன்றை குறிவைத்து மேற்கொள்ளப்பட்டுள்ள தற்கொலைக் கார் குண்டுத்தாக்குதலில் நான்கு மாணவர்கள் பலியாகியுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.
இன்று (21.05.2025) நடத்தப்பட்டுள்ள குறித்த தாக்குதலில் 38 பேர் காயமடைந்துள்ளதாகவும் வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
38 பேர் படுகாயம்
காயமடைந்தவர்களில் பலரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளதாகவும், பலி எண்ணிக்கை உயரும் என்றும் அஞ்சப்படுவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
பேருந்து, இராணுவத்தால் நடத்தப்படும் பாடசாலை ஒன்றுக்கு மாணவர்களை ஏற்றிச் சென்று கொண்டிருந்தபோது இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.
இந்தத் தாக்குதலுக்கு இதுவரை எந்தக் குழுவும் பொறுப்பேற்காத நிலையில், பொதுமக்கள் மற்றும் பாதுகாப்புப் படையினரை அடிக்கடி தாக்கி வரும் பலூசிஸ்தான் விடுதலை இராணுவம் (BLA) இந்த தாக்குதலை மேற்கொண்டிருக்கலாம் என்ற சந்தேகத்தை பாகிஸ்தான் வெளியிட்டுள்ளது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |





விடுதலைப் போராட்டத்தை எப்படி முன்னெடுப்பது..! 2 நாட்கள் முன்

கடும் பொருளாதார நெருக்கடிக்கு மத்தியில்... இந்தியாவிற்கு எதிரான முடிவெடுத்த ஆசிய நாடொன்று News Lankasri

ஸ்ருதி அம்மா செய்த கேவலமான வேலை, முத்து, ரவிக்கு தெரிந்த உண்மை.. சிறகடிக்க ஆசை பரபரப்பு புரொமோ Cineulagam
