சுவிஸ் பெண் உட்பட 2 வெளிநாட்டவர்களின் உயிரை காப்பாற்றிய அதிகாரிகள்
மாத்தறை, மிரிஸ்ஸ கடலில் குளித்துக் கொண்டிருந்த வெளிநாட்டுப் பெண் ஒருவரும், ஆண் ஒருவரும் கடல் அலையில் அடித்துச் செல்லப்பட்ட நிலையில், பொலிஸ் உயிர்காப்பு பிரிவின் அதிகாரிகளால் மீட்கப்பட்டுள்ளனர்.
இந்த சம்பவம் நேற்று பிற்பகல் இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.
அந்த நேரத்தில், உயிர்காக்கும் பணியில் இருந்த அதிகாரிகள் உடனடியாக நடவடிக்கை எடுத்து, கடும் போராட்டத்தின் பின்னர் அவர்களை காப்பாற்றியுள்ளனர்.
சுற்றுலா பயணிகள்
மீட்கப்பட்டவர்களுக்கு அடிப்படை மருத்துவ சிகிச்சையும் அவர்களால் வழங்கப்பட்டுள்ளது.
கடலில் அடித்து செல்லப்பட்ட ஆண் 31 வயது பங்களாதேஷ் நாட்டவர் எனவும் காயமடைந்த பெண் 20 வயது சுவிஸ் நாட்டை சேர்ந்தவர் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
காப்பாற்றப்பட்ட இரண்டு சுற்றுலா பயணிகளும் உடல் நலத்துடன் இருப்பதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.


பதினாறாவது மே பதினெட்டு 2 நாட்கள் முன்

அடுத்த 12 மணி நேரத்தில் உருவாகும் புதிய காற்றழுத்த தாழ்வுப்பகுதி.., எந்தெந்த பகுதிகளில் மழை? News Lankasri

புலம்பெயர்ந்தோரின் குடும்பங்களும் பிரித்தானியாவுக்குள் அனுமதிக்கப்படலாம்: அச்சம் தெரிவித்துள்ள விமர்சகர்கள் News Lankasri

கார் பிரச்சனையில் தப்பித்த முத்து-மீனாவிற்கு வந்த அடுத்த அதிர்ச்சி.. என்ன செய்வார்கள், சிறகடிக்க ஆசை பரபரப்பு புரொமோ Cineulagam
