யாழில் கடற்றொழிலுக்காக சென்ற குடும்பஸ்தர் சடலமாக மீட்பு
யாழ்ப்பாணம் - அராலி மேற்கு கடலில் இருந்து குடும்பஸ்தர் ஒருவரது சடலமானது மீட்கப்பட்டுள்ளது.
இந்த சம்பவம் இன்று(09.07.2026) இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அராலி மத்தி, வட்டுக்கோட்டையை சேர்ந்த 49 வயதான செல்லையா சிவகுமார் என்பவரே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
கடற்றொழிலுக்காக சென்றவர் சடலமாக மீட்பு
குறித்த நபர் இன்று(09) கடற்றொழிலுக்கு சென்று நிலையில், மதியம் 12 மணியளவில் அவர் சடலமாக மீதப்பது அங்கிருந்த கடற்றொழிலாளர்களால் அடையாளம் காணப்பட்டுள்ளது.

இதனைத் தொடர்ந்து, சம்பவம் தொடர்பில் அவரின் உறவினர்களுக்கும், வட்டுக்கோட்டை பொலிஸாருக்கும் தகவல் வழங்கப்பட்டுள்ளது.
இதனடிப்படையில், பொலிஸார் சடலத்தை மீட்டு யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கு கொண்டு சென்றுள்ளனர்.
இந்நிலையில், குடும்பஸ்த்தரின் இறப்பு தொடர்பில் மரண விசாரணைகள் திடீர் மரண விசாரணை அதிகாரி ஆ.ஜெயபாலசிங்கம் முன்னெடுத்துள்ளார்.

ஒரு மணித்தியாலத்திற்குள் நடந்து முடிந்த கொடூரம்! கைதிகளுடனான பேச்சுவார்தையில் அதிகாரிகள் இழைத்த தவறு