அம்பாறை- பனங்காடு பாலத்தடியில் சடலம் மீட்பு: பொலிஸார் விசாரணை
அம்பாறை -பனங்காடு பாலத்தடியில் மீட்கப்பட்ட ஆணின் சடலம் தொடர்பில் அடையாளம் காண அக்கரைப்பற்று பொலிஸார் பொதுமக்களின் உதவியை நாடியுள்ளனர்.
அம்பாறை மாவட்டம் அக்கரைப்பற்று பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பனங்காடு பாலத்திற்கு அருகில் உள்ள ஆற்றில் இன்று(18.3.2026) ஆணின் சடலம் அக்கரைப்பற்று பொலிஸாரினால் மீட்கப்பட்டிருந்தது.
ஆணின் சடலமொன்று மிதந்த நிலையில் கிடப்பதாக குளத்தில் மீன் பிடிக்கச் சென்ற மீனவர்களால் வழங்கப்பட்ட தகவலுக்கமைய குறித்த சடலம் மீட்கப்பட்டுள்ளது.
பொலிஸார் விசாரணை
மீட்கப்பட்ட சடலம் முதலை கடித்து உள்ளதா அல்லது தற்கொலையா அல்லது கொலை செய்யப்பட்டு வீசப்பட்டுள்ளதா என அங்கு சென்ற அக்கரைப்பற்று பொலிசார் விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.

சுமார் 5 அடி 6 அங்குலம் உயரம் மற்றும் சுமார் 45 வயது முதல் 50 வயது வரை மதிக்கத்தக்க சடலத்தை அக்கரைப்பற்று பொலிசாருடன் இணைந்து அம்பாறை தடயவியல் பிரிவு பொலிசார் பொதுமக்களின் உதவியுடன் சடலத்தை கரைக்கு கொண்டு வருவதற்கான நடவடிக்கை எடுத்துள்ளனர்.
அத்துடன் மீட்கப்பட்ட இச்சடலம் நீண்ட நாட்கள் உயிரிழந்த நிலையில் காணபட்டுள்ளதுடன் சடலம் இனங்காண முடியாத வகையில் சிதைந்துள்ளதாக ஆரம்பக்கட்ட விசாரணையில் இருந்து தெரியவந்துள்ளது.
பொது மக்களின் உதவி
அக்கரைப்பற்று பொலிஸ் நிலையத்தில் காணாமல் சென்ற நபர்கள் தொடர்பில் எதுவித முறைப்பாடுகளும் இல்லை என்பதுடன் அருகில் உள்ள பொலிஸ் நிலையங்களுக்கும் அறிவிக்கப்பட்டுள்ளது.

அத்துடன் சடலம் அடையாளம் காணப்படாத நிலையில் உயிரிழந்தவரை அடையாளம் காண்பதற்காக பொலிஸார் பொது மக்களின் உதவிகளை நாடியுள்ளனர்.
அக்கரைப்பற்று பிராந்திய உதவி பொலிஸ் அத்தியட்சகர் ஆலோசனைக்கு அமைய அக்கரைப்பற்று பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி வழிகாட்டுதலில் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
பணத்தை திருடி நிலாவிடம் கொடுத்த சோழன், வீட்டிற்கு தேடிவந்த பிரச்சனை... அய்யனார் துணை சீரியல் Cineulagam
ஈரானில் இருந்து அமெரிக்க படைகள் வெளியேறும்: போர் இறுதிக் கட்டத்தை எட்டி விட்டதாக டிரம்ப் அறிவிப்பு News Lankasri