யாழில் கிணற்றில் இருந்து மீட்கப்பட்ட குடும்பஸ்தரின் சடலம்
யாழ்ப்பாணம்(Jaffna) - மயிலங்காடு பகுதியில் தோட்ட கிணற்றில் இருந்து குடும்பஸ்தர் ஒருவரது சடலம் மீட்கப்பட்டுள்ளது.
குறித்த சடலம் நேற்றையதினம்(11.11.2024) மீட்க்கப்பட்டுள்ளது.
மயிலங்காடு, எழாலை தெற்கு பகுதியைச் சேர்ந்த சுவாம்பிள்ளை வவி (வயது 46) என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
இரண்டு தினங்கள்
இச்சம்பவம் குறித்து மேலும் தெரிய வருகையில்,
கடந்த சனிக்கிழமை வீட்டிலிருந்து குறித்த நபர் வெளியில் சென்றதாக உறவினர்கள் தெரிவித்துள்ளனர்.
இந்நிலையில் இரண்டு தினங்களாக அவரை காணாத நிலையில் உறவினர்கள் தேடுதலில் ஈடுபட்டுள்ளனர்.
உடற்கூற்று பரிசோதனை
தொடர்ந்து மேற்கொள்ளப்பட்ட தேடுதலில் அவரது சடலம் நேற்றையதினம் தோட்டக்கிணறு ஒன்றில் இருந்து மீட்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் அவர் மது போதையில் கிணற்றுக்குள் விழுந்திருக்கலாம் என சந்தேகம் வெளியிட்டப்பட்டுள்ளது.
இதற்கமைய உடற்கூற்று பரிசோதனைகளின் பின்னர் சடலம் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |

பதினாறாவது மே பதினெட்டு 1 நாள் முன்

வங்கதேசத்தில் பிரபல நடிகை கொலை வழக்கில் கைது: விமான நிலையத்தில் மடக்கி பிடித்த பொலிஸார் News Lankasri

Brain Teaser Challenge: மனதை குழப்பும் புதிர்- 7 வினாடியில் திருடனின் மனைவியை கண்டுபிடிக்க முடியுமா? Manithan
