பிரியந்த குமாரவின் உடல் இன்று இலங்கைக்கு கொண்டுவரப்படுகின்றது!
பாகிஸ்தானின் சியல்கோட்டில் கொடூரமான முறையில் கொலைசெய்யப்பட்ட இலங்கையரான பிரியந்த குமார தியவடனவின் பூதவுடல் இன்று இலங்கைக்கு கொண்டுவரப்படவுள்ளது.
பாகிஸ்தானின் லாகூர் விமான நிலையத்திலிருந்து ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸின் UL186 என்ற விமானத்தில் அவரது உடல் இலங்கைக்கு கொண்டுவரப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
பாகிஸ்தானின் சியால்கோட்டில் உள்ள வசிராபாத் வீதியில் அமைந்துள்ள, தனியார் தொழிற்சாலை ஒன்றில் மேலாளராக பணிபுரியும் ஊழியர், ஏனைய ஊழியர்களினால் சித்திரவதைக்கு உள்ளாகி எரியூட்டப்பட்டு கொலை செய்யப்பட்டுள்ளார்.
சம்பவத்தில் கொலை செய்யப்பட்ட நபர் பிரியந்த குமார என்ற இலங்கையைச் சேர்ந்தவர் என சியால்கோட் மாவட்ட காவல்துறை அதிகாரி உமர் சயீத் மாலிக் உறுதிபடுத்தியுள்ளார். இந்த சம்பவம் கடந்த வெள்ளிக்கிழமை இடம்பெற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.
இதனிடையே, அவரது குடும்ப உறுப்பினர்களுக்கு இழப்பீடு வழங்கப் பாகிஸ்தான் அரசாங்கம் நடவடிக்கை எடுக்கும் என்று பாகிஸ்தான் அரசாங்கம் அறிவித்துள்ளது.
பாகிஸ்தான் தகவல் தொடர்பாடல் அமைச்சரும், அரசாங்க ஊடகப் பேச்சாளருமான பவாத் செளத்திரி இதனை தெரிவித்துள்ளார். கொழும்பு சிங்கள ஊடகம் ஒன்றுக்கு வழங்கிய விசேட செவ்வியில் அவர் இதனை தெரிவித்திருந்தார்.
| மேலும் இலங்கை செய்திகளை உங்களது Whatsapp இற்கு பெற்றுக்கொள்ள இங்கே கிளிக் செய்யவும்! |
சீனாவில் நூற்றுக்கணக்கான விமான சேவைகள் ரத்து... லட்சக்கணக்கானோர் வீடுகளை விட்டு வெளியேற்றம் News Lankasri
சனி - சூரியன் சேர்க்கையால் உருவாகும் அரிய யோகம்: இந்த ராசிகளின் வாழ்வில் அதிர்ஷ்ட காற்று வீசப்போகுது! Manithan
இந்த வார சண்டே எல்லா தொலைக்காட்சியிலும் விஜய் பட ஸ்பெஷல் தான்... என்னென்ன படங்கள் பாருங்க... Cineulagam
லட்சக்கணக்கான புலம்பெயர்ந்தோருக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தும் செய்தி: பிரித்தானிய பிரதமரின் திட்டம் News Lankasri
தாக்குதலைத் தீவிரப்படுத்தும் ஹவுதிகள்... சவுதி அராம்கோ எண்ணெய் நிலையம் மீது ஏவுகணை வீச்சு News Lankasri