மன்னாரில் கரையொதுங்கிய ஆணின் சடலம் - விசாரணைகள் தீவிரம்
மன்னார் - வங்காலை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட வங்காலை கடற்கரையில் உருக்குலைந்த நிலையில் ஆணொருவரின் சடலம் பொலிஸாரால் மீட்கப்பட்டுள்ளது.
இந்த சம்பவம் இன்று(07.08.2026) இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இன்றைய தினம் காலையில், கடற்றொழிலுக்காக கடற்றொழிலாளர்கள் கடலுக்கு சென்ற நிலையில், சடலம் கிடப்பதை கண்டு பொலிஸாருக்கு தகவல் வழங்கப்பட்டுள்ளது.
சடலம் மீட்பு
இதனையடுத்து, சம்பவ இடத்திற்கு விரைந்த பொலிஸார், சடலத்தை மீட்டுச் சென்றுள்ளனர். குறித்த சடலம் உருக்குலைந்த நிலையில் காணப்படுவதோடு இதுவரை அடையாளம் காணப்படவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறித்த சடலம் இந்திய கடற்றொழிலாளரா? அல்லது தொழிலுக்குச் சென்று காணாமல் போன கடற்றொழிலாளரா? என்பது குறித்து இதுவரை தெரியவில்லை.
இந்த சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.