கொழும்பில் வீட்டிற்குள் புகுந்து தங்கநகைகள் மற்றும் பெருந்தொகை பணம் கொள்ளை
கொழும்பு - கல்கிஸ்ஸை பகுதியில் வீடொன்றிற்குள் புகுந்து பெருந்தொகை பணம் மற்றும் தங்க நகைகளை திருடிய சம்பவம் தொடர்பில் மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கடந்த ஜூலை 18 ஆம் திகதி ஒரு வீட்டிற்குள் புகுந்து 1,41,00,000 ரூபாய் மதிப்புள்ள தங்க நகைகள் மற்றும் பெருந்தொகை பணம் திருடப்பட்ட சம்பவம் தொடர்பான விசாரணையை தொடர்ந்து கைது செய்யப்பட்டுள்ளனர்.
குற்றப் புலனாய்வுப் பிரிவால் கைது
இதன்போது இரண்டு பெண் சந்தேகநபர்களும், திருட்டுக்கு உடந்தையாக இருந்த ஒரு சந்தேகநபரும் குற்றப் புலனாய்வுப் பிரிவால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

அதன்படி, இந்த குற்றத்தில் ஈடுபட்ட இரண்டு பெண் சந்தேகநபர்களும் நேற்று (6) தெஹிவளை பகுதியிலும், திருட்டுக்கு உடந்தையாக இருந்த ஒரு ஆண் மற்றும் ஒரு பெண் சந்தேகநபரும் ஹட்டன் , பத்தனை பகுதியிலும் கைது செய்யப்பட்டனர்.
8 ஜோடி தங்கக் காதணிகள், 4 தங்கப் பதக்கங்கள், ஒரு கை வளையல், 10 தங்க நெக்லஸ்கள், ஒரு கைக்காப்பு, 2 தங்க மோதிரங்கள் மற்றும் பல பொருட்கள் உட்பட திருடப்பட்ட பொருட்கள் பொலிஸ் காவலில் எடுக்கப்பட்டுள்ளன.
சந்தேகநபர்களுக்கு 28, 46, மற்றும் 53 வயது என்றும், அவர்களில் ஒருவருக்கு 28 வயது என்றும், அவர்கள் ஹட்டன், பத்தனை பகுதியைச் சேர்ந்தவர்கள் என்றும் பொலிஸ் தெரிவித்துள்ளது.
இதற்கமைய, பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.