நாட்டில் பதற்றமான சூழல்! தீவிரமடையும் சிறைச்சாலை கலவரம் - ஜனாதிபதி தலைமையில் அவசர கூட்டம்
சிறைச்சாலைகளில் நிலவும் சூழ்நிலை தொடர்பில் ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க தலைமையில் இன்று (07) பிற்பகல் விசேட கலந்துரையாடல் நடைபெறவுள்ளது.
பொதுப் பாதுகாப்பு மற்றும் நாடாளுமன்ற விவகாரங்கள் அமைச்சர் ஆனந்த விஜேபால இதனை தெரிவித்துள்ளார்.
கடந்த 24 மணித்தியாலங்களுக்குள் வெடித்த மோதல்கள்
கடந்த 24 மணித்தியாலங்களுக்குள் நாட்டில், மெகசின், குருவிட்ட, பல்லன்சேன உள்ளிட்ட சிறைச்சாலைகளில் மோதல் நிலை ஏற்பட்டதோடு சிலர் உயிரிழந்துதுள்ளடன், பலர் படுகாயமடைந்துள்ளனர்.
நேற்று இரவு (06) மெகசின் சிறையில் கலவரம் வெடித்த நிலையில், தற்போது கட்டுக்குள் கொண்டுவரப்பட்டுள்ளது.
இதில் 11 கைதிகள் காயமடைந்த நிலையில், வைத்தியசாலையில் சேர்க்கப்பட்ட நிலையில், இன்று காலை கைதி ஒருவர் உயிரிழந்திருந்தார்.
இதனையடுத்து இன்று காலை முதல் (07) குருவிட்ட சிறையிலும் கலவரம் வெடித்துள்ளதுடன், இரண்டு கைதிகள் உயிரிழந்ததாகவும், மற்றொரு குழுவினர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
நாட்டில் பதற்றமான சூழல்
இதனையடுத்து இன்று காலை முதல் நீர்கொழும்பு - பல்லன்சேன சிறைச்சாலையில் அமைதியின்மை ஏற்பட்டுள்ள நிலையில் நிலைமையைக் கட்டுப்படுத்த கண்ணீர்ப் புகைத் தாக்குதல் நடத்தப்பட்டு வருகின்றது.

இந்தநிலையில், குறித்த சிறைச்சாலைகளில் நிலைமையைக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவர பாதுகாப்புத் தரப்பினர் கடும் பிரயத்தனங்களை மேற்கொண்டுள்ளனர்.
இதன் காரணமாக நாட்டில் பதற்றமான சூழல் நிலவிவரும் நிலையில், ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க தலைமையில் இன்று (07) பிற்பகல் விசேட கலந்துரையாடல் நடைபெறவுள்ளது.
you may like this video
Bigg Boss 10: முனியம்மாவின் 200 கிலோ சிக்கன் Luxury Purchases.... விஜய் சேதுபதி கேட்ட கேள்வி Manithan
Bigg Boss 10: பிக்பாஸ் வீட்டிற்குள் போன் செய்த விஜய் சேதுபதி! மாட்டிக் கொண்ட குழந்தை முக கொலைகாரி Manithan
தேர்தல் பின்னடைவு ஒரு பக்கம்... விற்பனை இல்லாமல் Cybertruck உற்பத்தியை நிறுத்தும் எலான் மஸ்க் News Lankasri