காணாமல் போன இரு இளைஞர்கள் சடலமாக மீட்பு (Photos)
அம்பாறை மாவட்டம் பெரிய நீலாவணை பொலிஸ் பிரிவில் உள்ள கடற்கரைப்பகுதியில் காணாமல் போன இரு மாணவர்கள் சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இச்சம்பவமானது நேற்றைய தினம் (12) இடம்பெற்றுள்ளது.
மருதமுனை பகுதியைச் சேர்ந்த முகமது பைரூஸ், வசீம் ஜெசீத் மற்றும் உபைத்துல்லாஹ் அத்தீஸ் அகமட் எனும் தேசிய பாடசாலை மாணவர்களே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக பொலிஸாரின் முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.
கடந்த (10)ம் திகதி மாலை 5.30 மணியளவில் மூன்று பாடசாலை மாணவர்கள் கடல் அலையில் இழுத்துச் செல்லப்பட்டு மாயமானதுடன் அதில் ஒருவர் மீட்கப்பட்டு வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அன்றைய தினம் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இதனைத்தொடர்ந்து காணாமல் போன இரு மாணவர்களின் சடலங்கள் நேற்றைய தினம்(11) மாலை பொதுமக்களால் மீட்கப்பட்டு மரண விசாரணையின் பின்னர் உறவினர்களிடம் பொலிஸாரால் கையளிக்கப்பட்டது.



குடும்பம் முழுவதையும் இழந்த இலங்கையருக்கு கனடா தரப்பிலிருந்து ஒரு ஆறுதலளிக்கும் செய்தி News Lankasri
கனடா, கிரீன்லாந்தை இணைத்து ட்ரம்ப் வெளியிட்ட புதிய அமெரிக்க வரைபடம் - உலகளவில் சர்ச்சை News Lankasri