வட சைப்ரஸ் கடற்பகுதியில் 270 பேருடன் பயணித்த படகு கவிழ்ந்து விபத்து: ஒருவர் உயிரிழப்பு
வட சைப்ரஸ் கடற்பகுதியில் சுமார் 270 பேருடன் பயணித்த படகு ஒன்று கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் ஒருவர் உயிரிழந்துள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
வட சைப்ரஸின் கிரினியா துறைமுகத்திலிருந்து துருக்கியின் தசுசு துறைமுகம் நோக்கி பயணித்த தனியார் சொகுசு படகு ஒன்றே, துறைமுகத்திலிருந்து புறப்பட்ட சிறிது நேரத்திலேயே எதிர்பாராதவிதமாக நீரில் மூழ்கத் தொடங்கியுள்ளது.
படகு கவிழ்ந்து விபத்து
குறிப்பிட்ட படகில் 259 பயணிகளும் 8 பணியாளர்களும் அடங்கலாக மொத்தம் 267 பேர் பயணித்துள்ளதாக வட சைப்ரஸ் போக்குவரத்து அமைச்சர் எர்ஹான் அரிக்லி தெரிவித்துள்ளார்.
கடலில் கவிழ்ந்த படகின் மீது சிவப்பு நிற உயிர் பாதுகாப்பு அங்கிகளை அணிந்தவாறு பயணிகள் அமர்ந்திருக்கும் காட்சிகள் வெளியாகியுள்ளன.

சம்பவ இடத்திற்கு விரைந்த கடலோரப் காவல்படையினரும் மீட்புக் குழுவினரும் படகிலிருந்தவர்களை மீட்கும் நடவடிக்கைகளில் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர். மீட்கப்பட்ட பயணிகள் அனைவரும் சிகிச்சைக்காக கிரினியா துறைமுகத்திற்கு கொண்டு செல்லப்பட்டு, அங்கிருந்து மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டு வருகின்றனர்.
விபத்துக்கான துல்லியமான காரணம் இதுவரை கண்டறியப்படவில்லை என்பதுடன், மீட்புப் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன.
எங்கள் நிலங்கள் எங்களுடையதுதானே… அது எப்படி உங்களுடையதாகும்.. 11ஆவது வாரமாகவும் பலாலி மக்களின் போராட்டம்