கறுப்பு ஜீலை கலவரத்தை நினைவு கூர்ந்து வவுனியாவில் ஆர்ப்பாட்டம் (PHOTOS)
கறுப்பு ஜீலை கலவரத்தை நினைவு கூர்ந்தும் ஒற்றுமையை வலியுறுத்தி வவுனியாவில் ஆர்ப்பாட்டமொன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது.
சோசலிச இளைஞர் சங்கத்தின் ஏற்பாட்டில் மூவின மக்களின் பங்குபற்றுதலுடன் குறித்த ஆர்ப்பாட்டமானது வவுனியா பழைய பேருந்து நிலையம் முன்பாக நேற்று (14.07) மாலை இடம்பெற்றது.
இதன்போது ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள்,இனியும் கலவரம் வேண்டாம், பிரிவினைகள் வேண்டாம், சமூக ஒற்றுமையை குலைக்காதே, ஆட்சியாளர்களே இனவாதத்தை தூண்டாதே, யாழ் நூலகத்தை எரித்தது இனவாதமே, நாடு பூராகவும் ஜீலை கலவரத்தை திட்மிட்டு நடத்தியது ஆட்சியாளர்களே' என எழுதப்பட்ட பதாதைகளை ஏந்தியிருந்ததுடன், கோசங்களையும் எழுப்பியுள்ளனர்.
இதன்போது ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள், ஆட்சிக்கு வந்த ஐக்கிய தேசிய கட்சி, சிறிலங்கா சுதந்திரக் கட்சி மற்றும் பொதுஜன பெரமுன என்பன நாட்டின் இன நல்லுறவு சீர்குலைத்து கலவரங்கள் ஏற்படக்காரணம் எனவும், அவ்வாறான ஆட்சியாளர்களை விரட்டியடிக்க வேண்டும் எனவும் கருத்து தெரிவித்துள்ளனர்.










98வது ஆஸ்கர்.. சிறந்த சர்வதேச திரைப்பட பிரிவில் தேர்வாகியுள்ள ஜான்வி கபூரின் 'ஹோம்பவுண்ட்' படம்.. Cineulagam
Chelsea அணியை விற்றத் தொகை... ரஷ்ய கோடீஸ்வரருக்கு இறுதி எச்சரிக்கையை விடுத்த பிரித்தானியா News Lankasri
முத்துவை அசிங்கப்படுத்திய சீதா, நீதுவால், ரவி-ஸ்ருதி இடையே வெடித்த பெரிய பிரச்சனை... சிறகடிக்க ஆசை புரொமோ Cineulagam
Bigg Boss: பிக்பாஸ் வீட்டைவிட்டு வெளியேற கதறியழும் சாண்ட்ரா... பிக்பாஸ் எடுக்கும் முடிவு என்ன? Manithan