ஜனாதிபதியின் வருகைக்கு எதிராக யாழில் கறுப்பு கொடி போராட்டம்
யாழ். பல்கலைக்கழக கல்விசாரா ஊழியர்களால் ஜனாதிபதியின் யாழ்ப்பாண வருகைக்கு எதிராக கறுப்பு கொடி கட்டி போராட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது.
பல்கலைக்கழக மருத்துவபீட கட்டிடமொன்றை திறந்துவைப்பதற்காக யாழிற்கு வருகைதந்த ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுக்கு(Ranil Wickremesinghe) எதிராகவே போராட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது.
இதன்போது பல்கலைக்கழக பிரதான வளாகம் மற்றும் மருத்துவபீட வளாகத்தில் கறுப்பு கொடிகள் கட்டப்பட்டு போராட்டம் நடத்தப்பட்டுள்ளது.
சம்பள முரண்பாடு
இலங்கையிலுள்ள பல்கலைக்கழகங்களில் பணியாற்றும் சுமார் பன்னிரண்டாயிரம் பணியார்கள் தங்களுடைய சம்பள முரண்பாடு மற்றும் நீண்ட காலமாகத் தீர்த்து வைக்கப்படாத பிரச்சினைகள் பலவற்றைத் தீர்க்கக்கோரி நாடளாவிய ரீதியில் போராட்டத்தை முன்னெடுத்து வருகின்றனர்.

இந்நிலையில், பல்கலைக்கழகத்துக்குச் சொந்தமான கட்டமொன்றைக் கோலாகலமாகத் திறந்து வைப்பதற்காக ஜனாதிபதி உள்ளிட்ட கல்வி அமைச்சு மற்றும் பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் நடவடிக்கையை கண்டித்து போராட்டம் முன்னெடுக்கப்படுவதாக கூறப்படுகிறது.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |









பிரித்தானியாவின் மிகப்பெரிய பணக்காரர் காலமானார்: வணிக சாம்ராஜ்யத்தை உருவாக்கிய இந்தியர் News Lankasri
மீனாவிற்கு ஷாக் கொடுத்த செந்தில் என்ன செய்யப்போகிறார், பெரிய சிக்கலில் மயில்... பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 எபிசோட் Cineulagam
19 நாள் முடிவில் துருவ் விக்ரமின் பைசன் காளமாடன் படம் செய்துள்ள மொத்த வசூல்... எவ்வளவு தெரியுமா? Cineulagam
போதைப்பழக்கத்தில் சிக்கிய கேப்டன்: இனி அணியில் எடுக்க மாட்டோம்..கிரிக்கெட் வாரியம் திட்டவட்டம் News Lankasri