யாழிற்கு விஜயம் மேற்கொண்ட ஜனாதிபதி ரணில்
வடக்கு மாகாணத்திற்கான மூன்று நாள் விஜயத்திற்காக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க (Ranil Wickremesinghe) யாழ்ப்பாணத்தை (Jaffna) வந்தடைந்துள்ளார்.
உலங்கு வானூர்தி மூலம் இன்று (24.05.2024) காலை யாழ்ப்பாணம் மத்திய கல்லூரி மைதானத்தில் வந்திறங்கிய ஜனாதிபதியை அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, முன்னாள் இராஜாங்க அமைச்சர் விஜயகலா மகேஸ்வரன் ஆகியோர் வரவேற்றுள்ளனர்.
நிகழ்வுகள்
இந்நிலையில், ஜனாதிபதி ரணில் யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மருத்துவ பீட கட்டிடம் ஒன்றை திறந்து வைக்கவுள்ளார்.
மேலும், துரையப்பா விளையாட்டரங்கில் நடைபெறும் இளைஞர் சேவை மன்ற நிகழ்வு மற்றும் தந்தை செல்வா கலையரங்கில் நடைபெறும் ஆசிரியர் நியமன நிகழ்விலும் கலந்து கொள்ளவுள்ளார்.

யாழ்ப்பாணம் தந்தை செல்வா கலையரங்கில்
யாழ்மாவட்டத்தைச் சேர்ந்த 380 பேருக்கான காணி உறுதிப் பத்திரங்கள் ஜனாதிபதி
ரணில் விக்கிரமசிங்கவால் சம்பிரதாயபூர்வமாக வழங்கப்படவுள்ளது.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |




ஆண்டுக்கு ரூ 1 கோடி சம்பளம்... வெறும் 60 நொடிகளில் இந்தியரின் விசாவை நிராகரித்த அதிகாரிகள் News Lankasri
ஜனனியிடம் வீடியோ இல்லாத விஷயத்தை தெரிந்துகொண்ட கரிகாலன், பரபரப்பான எபிசோட்... எதிர்நீச்சல் தொடர்கிறது புரொமோ Cineulagam
மனைவிக்கு மயக்க மருந்து கொடுத்துக் கொன்ற மருத்துவர்: ரகசியக் காதலிக்கு அனுப்பிய செய்தி சிக்கியது News Lankasri