இலங்கையிலுள்ள சிறுவர்கள் தொடர்பில் முன்னெடுக்கப்படவுள்ள ஆய்வு
நாடளாவிய ரீதியில் உள்ள குழந்தைகளின் போஷாக்கு அளவுகள் தொடர்பாக கணக்கெடுப்பை நடத்துவதற்கு சுகாதார அமைச்சு தீர்மானித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
குறித்த கணக்கெடுப்பானது ஜூன் மாதத்தில் வரும் தேசிய ஊட்டச்சத்து மாதத்தை ஒட்டி நடத்தப்படவுள்ளது.
இதில் 5 வயதுக்குட்பட்ட குழந்தைகள் மற்றும் 6 முதல் 18 வயது வரையிலான சிறுவர்களின் ஊட்டச்சத்து அளவு தனித்தனியாக அளவிடப்படவுள்ளது.
ஊட்டச்சத்து குறைபாடு
குடும்ப சுகாதார உத்தியோகத்தர்கள் மற்றும் பொது சுகாதார பரிசோதகர்களால் இந்த கணக்கெடுப்பு மேற்கொள்ளப்படும் என குடும்ப சுகாதார பணியகம் தெரிவித்துள்ளது.
கடந்த ஆண்டு இதேபோன்று நடத்தப்பட்ட ஆய்வில் குழந்தைகளிடையே ஊட்டச்சத்து குறைபாடு அதிகரித்திருப்பது தெரியவந்துள்ளது.
இதன்படி பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்கு விசேட போஷாக்கு மாத்திரைகள் வழங்கப்பட்டதாக பணியகம் குறிப்பிட்டுள்ளது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |
நல்லூர் கந்தசுவாமி கோவில் கொடியேற்றம் - 29.07.2025





சிங்கப்பூரில் திடீர் சாலைப் பள்ளம்: காருடன் விழுந்த பெண்ணை., விரைந்து காப்பாற்றிய தமிழர் News Lankasri

The Fantastic Four: First Steps மூன்று நாட்களில் செய்துள்ள வசூல்.. பாக்ஸ் ஆபிஸ் ரிப்போர்ட் Cineulagam

யாரும் எதிர்ப்பார்க்காத நேரத்தில் ஆனந்தி கழுத்தில் தாலி கட்டிய அன்பு... சிங்கப்பெண்ணே பரபரப்பு புரொமோ Cineulagam
