சீரற்ற வானிலை தொடர்பில் விமானப்படை விடுத்துள்ள விசேட அறிவிப்பு
சீரற்ற வானிலையால் நீர்ப்பாசனத் திணைக்களம் திடீர் வெள்ளப்பெருக்கு எச்சரிக்கையை விடுத்துள்ள நிலையில், மூன்று உலங்கு வானுர்திகள் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளதாக விமானப்படை தெரிவித்துள்ளது.
அவசர நிலை தொடர்பில் தகவல் கிடைத்தவுடன் இந்த உலங்கு வானுர்திகள் மீட்புப் பணிகளுக்காக அனுப்பி வைக்கப்படும் என விமானப்படை ஊடகப் பேச்சாளர் துஷான் விஜேசிங்க(Dushan Wijesinghe) கூறியுள்ளார்.
கட்டுநாயக்க, இரத்மலானை மற்றும் ஹிகுராக்கொட விமானப்படை தளங்களில் இந்த உலங்கு வானுர்திகள் நிறுத்தப்பட்டுள்ளதாக விமானப்படை ஊடகப் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.
விமானப்படை ஊடகப் பேச்சாளர்
இதற்காக இரண்டு பெல் 212 விமானங்களும், எம்ஐ 17 விமானமும் தயார் செய்யப்பட்டுள்ளன.

பேரிடர் மேலாண்மை மையத்தின் அறிவிப்பின் பேரில் மீட்பு பணிகளுக்கு விமானங்கள் தயார் நிலையில் இருப்பதாக கூறப்படுகிறது.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |
தமிழர் அரசியலும் சிங்கள பௌத்த அரசியல் மனநிலையும்.. 20 மணி நேரம் முன்
பராசக்தி பட சம்பளம் பாக்கி.. வழக்கு தொடர்ந்த இயக்குநர் சுதா கொங்கரா.. வெளிவருமா இதயம் முரளி Cineulagam