யாழ். போதனா வைத்தியசாலை தொடர்பில் ரணில் விடுத்துள்ள அறிவிப்பு
யாழ். போதனா வைத்தியசாலையை தேசிய வைத்தியசாலையாக விரைவில் தரமுயர்த்தப்படும் என ஐனாதிபதி ரணில் விக்ரமசிங்க(Ranil Wickremesinghe) தெரிவித்துள்ளார்.
யாழ் போதனா வைத்தியசாலை அருகில் அமைந்துள்ள மருத்துவ பீட கட்டடத்தினை இன்று திறந்து வைத்த வைபவத்தில் கருத்து தெரிவிக்கும்போதே இதனை கூறியுள்ளார்.
“இலங்கையில் கொழும்பு தேசிய வைத்தியசாலை பல வருடங்களாக இயங்கி வந்த நிலையில் இரண்டாவதாக 5 வருடங்களிற்கு முன்னர் கண்டி போதனா வைத்தியசாலை தேசிய வைத்தியசாலையாக தரமுயர்த்தப்பட்டது.
தேசிய வைத்தியசாலை
மூன்றாவதாக அண்மையில் காலி போதனா வைத்தியசாலை தேசிய வைத்தியசாலை யாக தரமுயர்த்தப்பட்டது.
இனிவரும் காலங்களில் யாழ் போதனா வைத்தியசாலை தேசிய வைத்தியசாலை தரமுயர்த்தப்படுவது காலத்தின் தேவை
புதிய கட்டடத் தொகுதியில் இரண்டு சத்திர சிகிச்சைக் கூடங்களும், ஒரு சத்திர சிகிச்சைக் கூடமும், எண்டோஸ்கோபி மற்றும் மேமோகிராம், கருவுறுதல் பராமரிப்பு, யூரோடைனமிக் சேவைகள், கேட்போர் கூடம், முதுகலை மையம், மருத்துவப் பணியாளர் அறை மற்றும் கற்பித்தல் வசதிகள் உள்ளன.
இந்தக் கட்டடத் தொகுதி 70 கோடி ரூபா செலவில் கல்வி அமைச்சில் நிதி ஒதுக்கீட்டுக்கமைய நிர்மாணிக்கப்பட்டுள்ளது.
பொருட்களின் விலை அதிகரிப்பால் செலவு அதிகரித்து கட்டடத் தொகுதி இன்னும்
நிறைவு பெறாமல் இருப்பதுடன் கட்டடத்தை முழுமையாக நிர்மாணித்துப் பூர்த்தி
செய்ய இன்னமும் 13 கோடி ரூபா தேவை எனக் கணக்கிடப்பட்டுள்ளது” என ஜனாதிபதி கூட்டிக்காட்டியுள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |

முதல் முயற்சியிலேயே UPSC தேர்வில் தேர்ச்சி பெற்று.., ஐஏஎஸ் ஆகாத மிஸ் இந்தியா இறுதிப் போட்டியாளர் News Lankasri

ட்ரம்புக்கு பதிலடி... 8,000 அமெரிக்க தயாரிப்புகள் மீது வரி விதிக்க பிரித்தானியா முடிவு News Lankasri

கொடூர வில்லனாக மாறிய குணசேகரன், தனது அம்மாவையே இப்படி செய்வாரா?... எதிர்நீச்சல் பரபரப்பு புரொமோ Cineulagam
