தமிழர் பகுதியில் கறுப்பு ஜூலை நினைவேந்தல்
யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில்
பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் ஏற்பாட்டில் கறுப்பு ஜூலை நினைவுதினம் உணர்வுபூர்வமாக அனுஷ்டிக்கப்பட்டது.
பல்கலைக்கழக பிரதான வளாகத்தில் இன்றைய தினம் வியாழக்கிழமை (27.07.2023) கறுப்பு ஜூலை நினைவுருவ படத்திற்கு மாணவர்களால் ஈகைச் சுடரேற்றப்பட்டதோடு மலரஞ்சலியுடன் அகவணக்கம் செலுத்தப்பட்டது.
கறுப்பு ஜூலை நினைவுதினம்
நினைவேந்தலில் பல்கலைக்கழக மாணவர்கள் ஊழியர்கள் என பலரும் கலந்துகொண்டு அஞ்சலி செலுத்தினர்.
கிளிநொச்சி
கறுப்பு ஜுலையின் 40 ஆவது ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு கிளிநொச்சியில் இடம்பெற்றுள்ளது.
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு கிளிநொச்சி மாவட்டக்கிளையின் ஏற்பாட்டில் இன்றைய தினம் வியாழக்கிழமை 4.30 மணியளவில் கிளிநொச்சி சேவைச்சந்தை முன்றலில் நடைபெற்றது.
இந்நினைவேந்தல் நிகழ்வில் இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் தலைவர் மாவை.சோ.சேனாதிராசா, கட்சியின் பொதுச்செயலாளர் மருத்துவர் ப.சத்தியலிங்கம், தமிழ்த் தேசிய விடுதலைக் கூட்டமைப்பின் தலைவர் நல்லதம்பி சிறீகாந்தா, நாடாளுமன்ற உறுப்பினர்களான செல்வம் அடைக்கலநாதன், எம்.ஏ.சுமந்திரன், சிவஞானம் சிறீதரன், ஈழத்தமிழர் சுயாட்சிக் கழகத்தின் பொதுச்செயலாளர் அனந்தி சசிதரன், மு.நா.ம உறுப்பினர்களான அரியநேந்திரன், சிவாஜிலிங்கம், உள்ளிட்ட அரசியற் பிரமுகர்களும் கலந்து கொண்டுள்ளனர்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |





அநுரவின் கச்சதீவு பயணமும் மகாவம்ச மனநிலை 3 நாட்கள் முன்

ஜனனி, சக்திக்கு ஷாக் கொடுக்கும் வகையில் தர்ஷன் கூறிய வார்த்தை.. எதிர்நீச்சல் தொடர்கிறது சீரியல் புரொமோ Cineulagam

யார் இந்த சுஷிலா கார்க்கி? நேபாளத்தில் Gen-Z போராட்டக்காரர்களால் பிரதமராக தெரிவான நபர் News Lankasri

நேபாளத்தில் தடியுடன் இந்திய பெண் சுற்றுலா பயணியை துரத்திய கும்பல்: ஹோட்டலுக்கு தீ வைப்பு News Lankasri
