யாழில் கறுப்பு தினத்தை முன்னிட்டு ஒட்டப்பட்டுள்ள சுவரொட்டிகள்(Photo)
வடக்கு கிழக்கு தழுவிய பூரண ஹர்தாலுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதுடன், நாளை காலை 9.00 மணியளவில் யாழ். பல்கலைக்கழக முன்றலில் இருந்து மட்டகளப்பு நோக்கிய பேரணி ஆரம்பமாகவுள்ளது.
அதனை முன்னிட்டு இன்று (03.02.2023) யாழ். பல்கலைக்கழக மாணவர்களால் யாழில் பேரணி செல்லும் பகுதிகளில் சுவரொட்டிகள் ஒட்டப்பட்டதோடு, பல்கலைக்கழக வளாகத்தில் கறுப்பு கொடிகளும் கட்டப்பட்டுள்ளன.
இந்நிலையில் நாளை காலை வர்த்தக நிலையங்கள், போக்குவரத்து சேவையில் ஈடுபடுவோர், திரையரங்குகள் உட்பட்ட அனைத்து தரப்பினருக்கும் ஹர்தால் குறித்த அழைப்புக்கள் விடுக்கப்பட்டுள்ளது.
அனைத்து தரப்புக்களும் ஆதரவு
இதற்கு அனைத்து தரப்புக்களும் ஆதரவு நல்கியுள்ள நிலையில், நாளை பல்கலைக்கழக மாணவர்கள் பேரெழுச்சியாக தமது போராட்டங்களை முன்னெடுக்கவுள்ளனர்.
இதே நிலையில் தமது வீடுகள் வர்த்தக நிலையங்கள் உட்பட அனைத்து இடங்களிலும் கறுப்பு கொடியினை கட்டி அனைத்து தரப்புக்களையும் கலந்து கொள்ளுமாறு பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம், சிவில் அமைப்புக்கள் அழைப்பு விடுத்துள்ளன.

புதிய ஒப்பந்தம்... ஐரோப்பிய துருப்புகளுடன் ரஷ்யாவை எதிர்த்து களமிறங்கும் பிரித்தானியப் படைகள் News Lankasri
