போராட்டத்தில் கைது செய்யப்பட்ட மாணவர்களை விடுவிக்க பேச்சுவார்த்தை: தொடரும் போராட்டம்
புதிய இணைப்பு
தமிழர்களின் கரிநாளாக பிரகடனப்படுத்தி கிளிநொச்சியில் மேற்கொள்ளப்பட்ட ஆர்ப்பாட்டத்தில் கைது செய்யப்பட்டுள்ள மாணவர்களுடைய விடுதலை தொடர்பில் கிளிநொச்சி பொலிஸ் நிலையத்தில் தமிழ் தேசிய கூட்டமைப்பின் வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சாள்ஸ் நிர்மலநாதன் கலந்துரையாடலில் ஈடுபட்டுள்ளார்.
மேலும், மாணவர்களுடைய மருத்துவ அறிக்கை கிடைக்கப் பெற்றதும் விடுதலை செய்யப்படுவர் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
மேலும் போராட்டத்தின் போது யாழ் பல்கலைக்கழக மாணவர்களான கவிதரன், மிதுசன், எலிஸ்ராஜ், அபிசேக் மற்றும் நிவாசன் ஆகியோரே பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இரண்டாம் இணைப்பு
இலங்கையின் 76ஆவது சுதந்திரதினத்தை தமிழர்களின் கரிநாளாக பிரகடனப்படுத்தி கிளிநொச்சியில் மேற்கொள்ளப்பட்ட ஆர்ப்பாட்டத்தில் நான்கு பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
பொலிஸாரின் எதிர்ப்புக்கு மத்தியில் மேற்கொள்ளப்பட்ட போராட்டத்தில் கலந்து கொண்ட 4 பல்கலைக்கழக மாணவர்கள் இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர்.
அத்தோடு கடந்த 1 மணி நேரத்திற்கும் மேலாக A9 வீதியின் போக்குவரத்து முற்றாக பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இரண்டாம் இணைப்பு
கிளிநொச்சி - இரணைமடு சந்தியிலிருந்து யாழ். பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் ஏற்பாட்டில் சுதந்திர தின எதிர்ப்பு போராட்டம் சற்றுமுன்னர் ஆரம்பமாகி உள்ளது.
சுதந்திர தின எதிர்ப்பு போராட்டத்தில் கலந்து கொள்ள 5 பேருக்கு பொலிஸாரால் தடை உத்தரவு பெறப்பட்டுள்ள நிலையில் இப்போராட்டம் ஆரம்பமாகி உள்ளது.
முதலாம் இணைப்பு
கிளிநொச்சியில் யாழ் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் ஏற்பாட்டில் சுதந்திர தின எதிர்ப்பு போராட்டம் முன்னெடுக்கப்படவுள்ளது.
அதனை கட்டுப்படுத்த குறித்த பகுதியில் பெருமளவான பொலிஸார் கடமையில் அமர்த்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
பெருமளவான பொலிஸார்
போராட்டத்தை அடக்க பொவிஸார் தீவிர முயற்சி மேற்கொண்டு வருவதுடன், நீர்த்தாரை பயன்படுத்த நடவடிக்கை எடுக்க காத்திருக்கும் காட்சிகளும் பதிவாகியுள்ளது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |









