மட்டக்களப்பில் இரு மோட்டார் சைக்கிள்கள் நேருக்கு நேர் மோதியதில் 16 வயது சிறுவன் பலி
மட்டக்களப்பு (Batticaloa) - களுவாஞ்சிக்குடி, கல்முனை பிராதன வீதியில் இரு மோட்டார் சைக்கிள்கள் நேருக்கு நேர் மோதி ஏற்பட்ட விபத்தில் 16 வயது சிறுவன் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன் ஒருவர் படுகாயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
குறித்த விபத்தானது, களுவாஞ்சிக்குடி பிரதேச செயலகத்துக்கு அண்மித்த பகுதியில் இன்று (13.10.2024) பகல் இடம்பெற்றுள்ளது.
ஒருவர் படுகாயம்
கல்முனையில் இருந்து களுவாஞ்சிக்குடியை நோக்கி பிரயாணித்த மோட்டார் சைக்கிளும் களுவாஞ்சிக்குடியில் இருந்து கல்முனை நோக்கி பிரயாணித்த மோட்டார் சைக்கிளும் களுவாஞ்சிக்குடி பிரதேச செயலகத்துக்கு அண்மையில் வீதியில் நேருக்கு நேர் மோதியதில் இந்த விபத்து ஏற்பட்டுள்ளது.
இதன்போது, கொக்கட்டிச்சோலையை சேர்ந்த 16 வயதுடைய ரவீந்திரன் என்ற சிறுவன் சம்பவ இடத்திலேயே பரிதாபகரமாக உயிரிழந்துள்ளதுடன் ஒருவர் படுகாயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இதனையடுத்து, உயிரிழந்தவரின் சடலம் பிரேத பரிசோதனைக்காக களுவாஞ்சிக்குடி வைத்தியசாலையில் ஒப்படைக்கப்பட்டுள்ள நிலையில், சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை களுவாஞ்சிக்குடி போக்குவரத்து பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |

புலம் பெயர் தமிழர்களால் சிறீலங்காவை இலங்கையாக மாற்றிக்கொள்ள முடியுமா..! 50 நிமிடங்கள் முன்

viral video: நபரொருவரின் சப்பாத்தை பதம் பார்த்த ராஜ பழுப்பு பாம்பு... மெய்சிலிர்கும் காட்சி! Manithan

வெளிநாட்டவர்களில் சிலரது பாஸ்போர்ட்களை ரத்து செய்யும் வகையில் சட்டத்தில் மாற்றங்கள்: ஜேர்மனி திட்டம் News Lankasri
