சங்குக்கு நேர்ந்த கதி துரதிஸ்டவசமானது! சிறீதரன் ஆதங்கம்
தற்போதைய தேர்தல் களத்தில் சங்கு சின்னத்தை வேறு சிலர் கையில் எடுத்திருப்பது என்பது முரண்பாடான ஒரு விடயமாகும் என முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் தெரிவித்துள்ளார்.
கிளிநொச்சியில் அமைந்துள்ள இலங்கை தமிழரசு கட்சி அலுவலகமான அறிவகத்தில் இடம்பெற்ற விஜயதசமி விழாவும் மாவட்டத்தின் இலங்கை தமிழரசு கட்சியினுடைய வட்டார உறுப்பினர்களுக்குமான கலந்துரையாடலின்போதே இதனை கூறியுள்ளார்.
அவர் தொடர்ந்தும் குறிப்பிடுகையில், “நாங்கள் ஒரு பொது வேட்பாளரை ஆதரித்தவர்கள். தமிழ் மக்களுக்கான பிரச்சினைகளை தீர்ப்பதற்காகவும் எங்களது முழு செயற்பாடுகளையும் முன்னிறுத்தி இருந்தோம்.
காணாமல் ஆக்கப்பட்டவர்களுக்கான நீதி
குறிப்பாக தமிழ் மக்களுக்கு நடைபெற்ற இனப்படுகொலை மற்றும் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களுக்கான நீதி தமிழ் மக்களுக்கு வடக்கு - கிழக்கு இணைந்த ஒரு அரசியல் தீர்வு இந்த கோரிக்கைகளை முன்வைத்து பொது வேட்பாளரை ஆதரித்தவர்கள் என்பது உண்மையாகும்.

அதற்காக பாவிக்கப்பட்ட சங்கு சின்னத்தை வேறு சிலர் கையில் எடுத்திருப்பது என்பது முரண்பாடான ஒரு விடயமாகும்.
அதனை அவர்கள் அவ்வாறு செய்திருக்கக் கூடாது என்பது எனது கருத்தாகும்.
குறிப்பாக தமிழரது ஒற்றுமை தேசத் திரட்சி தமிழர்களை ஒன்றுபடுத்துதல் என்ற காரியத்துக்காக ஆற்றப்பட்ட அந்த விடயத்தில் தமது சின்னமாக அதனை கையில் எடுத்திருப்பது ஒரு முரணான விடயம்” என்றார்.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
இந்துமாகடல் அரசியலில் தமிழர் வகிபாகம் என்ன..! 2 நாட்கள் முன்
மீண்டும் சன் டிவி சீரியலில் என்ட்ரி கொடுத்த பாண்டவர் இல்லம் சீரியல் வேதநாயகி... எந்த தொடர்? Cineulagam
128 ஆண்டுக்கு பின் ஒலிம்பிக்கில் கிரிக்கெட் - ஆனால் பாகிஸ்தான், இலங்கைக்கு வாய்ப்பில்லை News Lankasri
கடைசி நேரத்தில் தப்பிய பிரபலம்.. பலிகாடான சீரியல் நடிகர்- அடுத்து வெளியேறுபவர் யார் தெரியுமா? Manithan
பழனிவேலா இது, இப்படியொரு காரியத்தை செய்துவிட்டார், பாண்டியன் என்ன செய்வார்... பாண்டியன் ஸ்டோர்ஸ் அடுத்த கதைக்களம் Cineulagam