நல்லூர் ஆலயத்தை விட பெரிய ஆலயத்தை அமைக்க முடியும்: ரணில் ஆதரவு
அனைத்து மதத் தலைவர்களும் நல்லூர் ஆலய பொறுப்பாளர்களும் விரும்பினால் நல்லூர் ஆலயத்தை விட பெரிய ஆலயத்தை அமைக்க முடியும் என ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.
யாழ்.மாவட்ட செயலகத்தில் இன்று (06.01.2024) காலை இடம்பெற்ற வடமாகாண அனைத்து மதத் தலைவர்களுடனான கலந்துரையாடலின் போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
அத்துடன் பொருளாதார அபிவிருத்திக்கு மத நல்லிணக்கம் மிகவும் முக்கியமானது என ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க வலியுறுத்தியுள்ளார்.
அபிவிருத்தி வேலைத்திட்டங்கள்
வடக்கில் யுத்தத்தினால் இழந்த வருமானத்தை வடக்கிற்கு மீள வழங்குவதற்கான அபிவிருத்தி வேலைத்திட்டங்களை துரிதப்படுத்த எதிர்பார்ப்பதாகவும் மதத் தலைவர்கள் ஆற்றக்கூடிய பங்களிப்பு பாரியதெனவும் சுட்டிக்காட்டியுள்ளார்.
மேலும் வடமாகாணத்தின் பாதுகாப்புப் பிரிவினருக்கு உட்பட்ட பகுதிகளில் உள்ள கோவில்கள் மற்றும் தேவாலயங்களின் பிரச்சினைகளுக்கு உடனடித் தீர்வு காணப்பட்டு, அந்த வழிபாட்டுத் தலங்களை மீளமைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என ஜனாதிபதி குறிப்பிட்டுள்ளார்.
வடக்கில் உள்ள இந்து மதத் தலைவர்கள் மற்றும் நல்லூர் கோவிலின் பொறுப்பதிகாரிகள் இணைந்து இதற்கான திட்டங்களை சமர்ப்பித்தால் அதற்கான முழு ஆதரவையும் வழங்குவேன் என குறிப்பிட்டுள்ளார்.
அத்துடன், வடக்கில் பல்கலைக்கழகங்களை அமைக்க நான் அனைவருக்கும் அனுமதி வழங்கவுள்ளேன். நீங்கள் யாரை கொண்டு வேண்டுமானாலும் இங்கு பல்கலைக்கழகங்களை அமைக்கலாம் எனவும் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.
5 தமிழ் மாணவர்களின் படுகொலைக்கு நீதிகேட்ட சிங்கள பௌத்த தேரர் கொடூரமாக படுகொலை : அம்பலப்படுத்தும் இளைஞர்
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |