5 தமிழ் மாணவர்களின் படுகொலைக்கு நீதிகேட்ட சிங்கள பௌத்த தேரர் கொடூரமாக படுகொலை : அம்பலப்படுத்தும் இளைஞர்
திருகோணமலையில் கடந்த 2006ஆம் ஆண்டு படுகொலை செய்யப்பட்ட 5 அப்பாவி மாணவர்களுக்கா நியாயம் கேட்ட, மற்றும் அவர்களுக்கு நேர்ந்த வன்முறைகளை தட்டிக்கேட்ட சிங்கள பௌத்த தேரர் ஒருவர் கொடூரமாக சுட்டுப் படுகொலை செய்யப்பட்டார் என சமூக ஆர்வலர் ராஜ்குமார் ரஜீவ்காந்த் தெரிவித்துள்ளார்.
பல்லாயிரக்கணக்கான கொலைகளை இலங்கை அரசாங்கம் முன்னின்று செய்துள்ளது என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.
லங்காசிறீக்கு வழங்கிய விசேட நேர்காணலின் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
2006ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 2ஆம் திகதி திருகோணமலையில் ஐந்து தமிழ் மாணவர்கள் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில் ரஜீவ்காந்த் விரிவாக இதன்போது தெளிவுபடுத்தினார்.
சுட்டுப் படுகொலை செய்யப்பட்ட இந்த மாணவர்கள், எவ்வித போராட்டங்களோ, அல்லது விடுதலைப் புலிகளுடனோ தொடர்பற்றவர்கள். அவர்களும் சாதாரண மக்களே, ஆனால் அவர்கள் கொடூரமாக படுகொலை செய்யப்பட்டனர் என்றும் ரஜீவ்காந்த் குறிப்பிட்டார்.
தொடர்ந்தும் தெரிவிக்கையில்,
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |