வவுனியாவில் திடீரென அமைக்கப்பட்ட புதிய இராணுவ முகாம்
வவுனியா புதிய பேருந்து நிலையத்திற்கு முன்பாக திடீரென நிரந்தர இராணுவ முகாமொன்று அமைக்கப்பட்டுள்ளது.
குறித்த இராணுவ முகாமானது நேற்று இரவு (05.01.2024) கனரக வாகனங்கள் சகிதம் சென்ற இராணுவத்தினரால் அமைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
புதிய பேருந்து நிலையத்திற்கு முன்பாக ஈஸ்டர் குண்டுத்தாக்குதல் நடைபெற்றபோது இராணுவ காவலரனொன்று அமைக்கப்பட்டு சோதனை நடவடிக்கைகள் இடம்பெற்றிருந்தது.
புதிய இராணுவ முகாம்
அதன் பின்னரும் அந்த காவலரண் அகற்றப்படாத நிலையில் இராணுவத்தினர் கடமையில் ஈடுபட்டிருந்தனர்.
இந்நிலையில் புதிய இராணுவ முகாம் அமைக்கப்பட்டதால் பயணிகளும் குறித்த பகுதியில் உள்ள பொதுமக்களும் அச்சத்துக்குள்ளாகியுள்ள நிலையில், வன்னிமாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர்கள் இது தொடர்பில் கவனம் செலுத்த வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |





கூலி படத்தில் தரமான நடித்து அசத்திய சௌபின் இப்படத்திற்காக வாங்கிய சம்பளம்.. எத்தனை கோடி தெரியுமா? Cineulagam

பசங்க பட நடிகர் ஜீவாவா இது, இப்போது அவர் ஒரு பிரபல கம்பெனியின் CEO... இந்த விஷயம் தெரியுமா? Cineulagam
