தமிழ் கலாச்சார அழிவுக்கு வித்திடும் ஜனாதிபதி மற்றும் செந்திலின் செயற்பாடுகள்: மா.சத்திவேல் காட்டம்

Ranil Wickremesinghe Senthil Thondaman Northern Province of Sri Lanka Jallikattu
By Shan Jan 06, 2024 10:51 AM GMT
Report

ஜனாதிபதி புகைப்படம் எடுப்பதும், கிழக்கு மாகாண ஆளுநர் ஜல்லிக்கட்டு விளையாட்டினை நடத்துவதும் அரசியல் ரீதியாக தமிழர்களின் கலாச்சார அழிவுக்கு வித்திடும் என சமூக நீதிக்கான செயற்பாட்டாளர் அருட்தந்தை மா.சத்திவேல் தெரிவித்துள்ளார்.

அவரால் இன்று (06.01.2024) வெளியிடப்பட்டுள்ள ஊடக அறிக்கையிலே இந்த விடயத்தை குறிப்பிட்டுள்ளார்.

அந்த அறிக்கையில் மேலும்,

வடக்கு, கிழக்கு தமிழர்களுக்கு எதிரான பாரிய இன அழிப்பு போரை முன்னெடுத்த இனவாத ஆட்சியாளர்கள், சிங்கள பௌத்தத்தை முன்னிறுத்தியும் அபிவிருத்தி எனும் போர்வையிலும் தமிழர் தாயகத்தின் நிலங்களை ஆக்கிரமித்து கொண்டிருக்கின்றனர்.

இலங்கையில் முதல்முறையாக நடைபெறும் ஜல்லிக்கட்டு

இலங்கையில் முதல்முறையாக நடைபெறும் ஜல்லிக்கட்டு

இந்தியாவின் இன்னொரு மாநிலம்

இந்த நிலையில், ஜனாதிபதி, கில்மிஷாவிற்கு பாராட்டு தெரிவித்து புகைப்படம் எடுப்பதும், கிழக்கு மாகாண ஆளுநர் பொங்கல் விழா எனும் போர்வையில் ஜல்லிக்கட்டை அறிமுகப்படுத்துவதும் அரசியல் ரீதியான தமிழர்களின் கலாச்சார பண்பாட்டு அழிவுக்கு வித்திடும் செயல்களாகும்.

தமிழ் கலாச்சார அழிவுக்கு வித்திடும் ஜனாதிபதி மற்றும் செந்திலின் செயற்பாடுகள்: மா.சத்திவேல் காட்டம் | Senthil Thondaman And Ranil Destroy Tamil Culture

இதனை சிவில் சமூக மற்றும் அரசியல் அமைப்புகள் வன்மையாக கண்டிப்பதோடு தொடர்ந்து இதற்கு இடமளிக்கவும் கூடாது. இல்லையேல் வீட்டுக்குள் புற்றாக அது வளர்ந்து விடும்.

தென்னிந்திய திரைப்படங்கள் வருடத்திற்கு ஒன்று அல்லது இரண்டு இலங்கையில் திரையிடப்பட்ட காலம் போய் தென்னிந்திய தொலைக்காட்சி அலைவரிசைகள் நாள் முழுவதும் பல திரைப்படங்களை காட்சிப்படுத்துவதோடு அதனோடு ஒட்டிய கலாச்சாரத்தை ஒவ்வொரு வீட்டுக்குள்ளும் மையம் கொள்ளும் அளவுக்கு விரிவுபடுத்தி உள்ளன.

வடக்கு, கிழக்கும், மலையகமும் இதனால் இந்தியாவின் இன்னொரு மாநிலமாக தோன்றியது என சிந்திக்க வைத்துள்ளது.

கலாச்சார பண்பாட்டு அழிவு

அதற்கு மத்தியில் தென்னிந்திய தொலைக்காட்சி அலைவரிசை நடத்தும் பாடல் போட்டி, பள்ளி செல்லும் மாணவர்களை தம் வசம் ஈர்த்துள்ளதோடு அவர்கள் திரையிசை பாடல்களை முணுமுணுக்கவும் வைத்துள்ளது.

தமிழ் கலாச்சார அழிவுக்கு வித்திடும் ஜனாதிபதி மற்றும் செந்திலின் செயற்பாடுகள்: மா.சத்திவேல் காட்டம் | Senthil Thondaman And Ranil Destroy Tamil Culture

அவர்களின் கல்வியை அழிக்கும் செயலை ஏற்க முடியாது. அண்மையில் அந்த அலைவரிசை நடத்திய பாடல் போட்டியில் பங்கு பற்றிய வட மாகாண மாணவி வெற்றி பெற்றதோடு, மலையக மாணவி ஒருவர் சமூக மட்டத்தில் புகழை அடைந்துள்ளார்.

தனிப்பட்ட ரீதியில் அவர்களின் வெற்றி பாராட்டுக்குரியது. ஆனால் அரசியல்வாதிகள் நாடாளுமன்றத்தில் கதைக்கும் அளவிலும், ஜனாதிபதி பாராட்டு தெரிவித்து புகைப்படம் எடுக்கும் அளவிலும் மாறியுள்ளமை பலத்த சந்தேகத்தை தோற்றுவித்துள்ளது.

திரைப்பட கலாச்சாரத்துக்குள் மக்களையும் இளம் சந்ததியினரையும் தள்ளி இன அழிப்புக்கு முகம் கொடுத்துக் கொண்டிருக்கின்ற சமூகத்தின் இன்னுமொரு அடையாள கூறான கலாச்சார பண்பாட்டு அழிவையும் தீவிர படுத்தும் செயலாகும். இது கல்வியை சீரழிக்கும் போதை செயலுமாகும். இவை தடுத்து நிறுத்தப்படல் வேண்டும்.

பேரினவாதிகளின் கைக்கூலி

அதன் இன்னும் ஒரு செயல் திட்டமாகவே கிழக்கு மாகாண ஆளுநர், தமிழர் கலாச்சாரம் என இதுவரை காலமும் இந்தியாவின் தமிழகத்தில் பொங்கல் வீர விளையாட்டாக இருந்த ஜல்லிக்கட்டினை இறக்குமதி செய்துள்ளார். இதில் விளையாட்டுக்கு அப்பால் அரசியலும் உள்ளது என்பது உண்மை.

தமிழ் கலாச்சார அழிவுக்கு வித்திடும் ஜனாதிபதி மற்றும் செந்திலின் செயற்பாடுகள்: மா.சத்திவேல் காட்டம் | Senthil Thondaman And Ranil Destroy Tamil Culture

மேய்ச்சல் தரை போராட்டத்திற்கு முடிவு கட்டி கால்நடை பணியாளர்களை பாதுகாக்க முடியாதவர்கள் வடகிழக்கு மற்றும் மலையக தமிழர்களின் பண்பாட்டை காக்க வழிசமைக்காதவர்கள் ஜல்லிக்கட்டு போட்டி நிகழ்த்துவது யாரை திருப்திப்படுத்துவதற்காக? இதன் அடுத்த கட்டம் தமிழ் மற்றும் சிங்கள மாடுகள் மோதும் நிலையும் உருவாக்கலாம்.

மலையக தமிழர்களை இந்திய வம்சாவளி தமிழர்கள் என்று தொடர்ந்தும் அடையாளப்படுத்தும் தொண்டமான் குழுவினர் வட மாகாணத்திலும் மலையகத்திலும் இந்த திட்டத்தை விரிவு படுத்தும் செயலை மௌனமாக அங்கீகரித்து தற்போது பண்பாட்டு அழிவை முன்னெடுக்க பொங்கல் விழாவை பயன்படுத்துவது வெட்கக்கேடான சேறு ஆகும்.

அத்தோடு இதன் மூலம் அவர்கள் பேரினவாதிகளின் கைக்கூலி என்பதையும் அடையாளப்படுத்தியுள்ளனர். இதனை தமிழர்கள் வன்மையாக கண்டிப்பதோடு சிவில் சமூக அமைப்புக்கள் பண்பாட்டை காப்பதற்கு ஒரு அமைப்பாக செயல்படாவிடின் பாரிய அழிவுக்கு முகம் கொடுக்கும் நிலை உருவாகும் என தெரிவித்துள்ளார். 

கட்டுநாயக்க விமான நிலையத்தில் புதிய மாற்றம்

கட்டுநாயக்க விமான நிலையத்தில் புதிய மாற்றம்

இலங்கையில் முதல்முறையாக நடைபெறும் ஜல்லிக்கட்டு

இலங்கையில் முதல்முறையாக நடைபெறும் ஜல்லிக்கட்டு

நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW 
மரண அறிவித்தல்

அனலைதீவு 4ம் வட்டாரம், Caledon, Canada

06 Sep, 2026
மரண அறிவித்தல்

மட்டக்களப்பு, சிலாபம், Oslo, Norway

02 Sep, 2026
மரண அறிவித்தல்

அனலைதீவு 4ம் வட்டாரம், Woodbridge, Canada

03 Sep, 2026
மரண அறிவித்தல்

அல்லிப்பளை, Spreitenbach, Switzerland

01 Sep, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வண்ணார்பண்ணை, Leiden, Netherlands, Sutton, United Kingdom

06 Sep, 2021
2ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், Edgware, United Kingdom

28 Aug, 2024
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 11ம் வட்டாரம், சுண்டுக்குழி, Ottawa, Canada

11 Sep, 2023
மரண அறிவித்தல்

கரைச்சிக்குடியிருப்பு, Toronto, Canada

05 Sep, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சாவகச்சேரி, கரவெட்டி

19 Aug, 2025
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, பரிஸ், France

04 Sep, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

ஓட்டுமடம், Scarborough, Canada

05 Sep, 2021
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

திருநெல்வேலி, Holzwickede, Germany

07 Aug, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

கல்வியங்காடு, கலட்டி, Montreal, Canada

08 Sep, 2023
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் மேற்கு, வவுனியா

28 Aug, 2024
மரண அறிவித்தல்
12ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, ஆனைப்பந்தி

06 Sep, 2014
5ம் ஆண்டு நினைவஞ்சலி
2ம் ஆண்டு நினைவஞ்சலி
15ம் ஆண்டு நினைவஞ்சலி

கரம்பொன் மேற்கு, Montreal, Canada

23 Aug, 2011
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கோண்டாவில் கிழக்கு, Toronto, Canada

18 Aug, 2025
7ம் ஆண்டு நினைவஞ்சலி

உரும்பிராய், Duisburg, Germany

04 Sep, 2019
3ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் மேற்கு, கொக்குவில், Toronto, Canada

05 Sep, 2023
4ம் ஆண்டு நினைவஞ்சலி
24ம் ஆண்டு நினைவஞ்சலி

அச்சுவேலி பத்தமேனி

03 Sep, 2002
3ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர், யாழ். கரவெட்டி, நெல்லியடி, உடையார்கட்டு, Toronto, Canada

03 Sep, 2023
மரண அறிவித்தல்

பளை, துன்னாலை, London, United Kingdom

28 Aug, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Harrow, United Kingdom

21 Aug, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US