இலங்கை பிறப்பு வீதத்தில் வீழ்ச்சி
இலங்கை பிறப்பு எண்ணிக்கை வீதம் வீழ்ச்சியடைந்துள்ளதாக கொழும்பு பல்கலைக்கழகத்தின் பேராசிரியர் இந்திரல் டி சில்வா தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில், கடந்த காலங்களோடு ஒப்பிடுகையில் கணிசமான அளவு பிறப்பு வீதம் குறைவடைந்துள்ளது.
இந்நிலை தொடர்ந்தால், 2027 ஆம் ஆண்டளவில் நாட்டின் சனத்தொகை 23.1 மில்லியனுக்கு குறைவடையலாம் .
வெளிநாடுகளுக்கு இடம்பெயர்தல்
இலங்கையிலுள்ள திருமண வயதை அடைந்த இளம் சமூகத்தினர் வெளிநாடுகளுக்கு இடம்பெயர்தல் மற்றும் திருமணம் செய்து கொள்ள விரும்பாமை போன்ற காரணிகளே பிறப்பு வீதத்தை பாதித்துள்ளது.

வருடாந்த உலக சனத்தொகையில் பிறப்புகளின் எண்ணிக்கை 134 மில்லியனாக இருந்த போதிலும், இலங்கையில் பிறப்பு எண்ணிக்கை ஆயிரம் பேருக்கு 12 குழந்தைகளாகக் குறையலாம் என குறிப்பிட்டுள்ளார்.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
உலகத் தமிழர்களை கோபப்படுத்தியுள்ள TVK கருத்து - ஈழத் தமிழர் ஆதரவில் இருந்து தடம் மாறுகிறாரா விஜய்? News Lankasri