இயன் சூறாவளி: ஜோ பைடன் எடுத்துள்ள நடவடிக்கை
ஐக்கிய அமெரிக்க மாநிலங்களுள் ஒன்றான புளோரிடா இயன் சூறாவளியால் பேரழிவைச் சந்தித்துள்ளது.
இந்நிலையில் அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் பேரழிவுகளை ஆய்வு செய்ய புளோரிடாவுக்குச் செல்லவுள்ளதாக வெள்ளை மாளிகை தகவல் தெரிவித்துள்ளது.
கடந்த சில நாட்களாக புளோரிடாவில் தொடர் கனமழை பெய்தது.
இந்த கனமழையால் புளோரிடாவில் உள்ள முழு கட்டடங்கள் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டதுடன், பல பகுதிகளில் நிலச்சரிவு ஏற்பட்டுள்ளன. இதேவேளை பல நகரங்கள் வெள்ளத்தால் மூழ்கியுள்ளன.
புளோரிடாவில் தொடர்ந்து பெய்து வரும் கனமழையால் மக்களின் இயல்பு வாழ்க்கை முற்றிலும் பாதிக்கப்பட்டுள்ளது.
இயன் சூறாவளியால் பேரழிவு
கடந்த செப்டெம்பர் 29ம் திகதி புளோரிடாவின் தென்மேற்கு பகுதியில் இயன் சூறாவளி புயல் பல அடி உயரத்திற்கு எழும்பி பேரழிவு ஏற்படுத்தியது.
இந்த சூறாவளியால் வீடுகள் மற்றும் நிலங்கள் புளோரிடாவில் அழிந்து போயியுள்ளன. ஃபோர்ட் மியர்ஸ் கடற்கரையில் ஏற்பட்ட பலத்த காற்றால் வீடுகள் இடிந்து விழுந்தன. பல வீடுகளில் வெள்ள நீரில் மூழ்கியது.
இந்நிலையில் இயன் சூறாவளியால் இறந்தவர்களின் எண்ணிக்கை 40 க்கு மேல் உயர்ந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
மீட்பு பணிகள்
இயன் சூறாவளியின் தாக்குதலுக்கு இலக்கான புளோரிடா சமூகங்கள் நேற்று முழு அளவிலான அழிவை எதிர்கொள்ள தொடங்கியுள்ளன.
மேலும் நீரில் மூழ்கியவர்களை தேடும் பணியானது இன்னும் தொடர்வதாகவும், சுற்றுப்புறங்களிலும் மாநிலத்தின் தென்மேற்கு கடற்கரையிலும் தப்பிப்பிழைத்தவர்களை தேடுவதில் தீவிரமாக மீட்பாளர்கள் செயற்படுவதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
புயல் தொடர்பான இறப்புகளின் உறுதிப்படுத்தப்பட்ட எண்ணிக்கை மாநிலம் முழுவதும் 44 ஆக உயர்ந்துள்ளது என்று புளோரிடா மருத்துவ பரிசோதனை ஆணையம் கூறியதுடன் மேலும் ஏனைய மாநிலங்களின் ஈர்ப்பு விடயங்கள் தெரியவில்லை எனவும் தெரிவித்துள்ளது.

பாக்., சீனாவுக்கு கவலையளிக்கும் செய்தி - Tejas MK1 போர் விமானங்களை மேம்படுத்தும் இந்தியா News Lankasri

திடீரென இப்படியொரு புகைப்படத்தை வெளியிட்ட VJ பிரியங்கா தேஷ்பாண்டே.. யாருக்கு இதை சொல்கிறார் Cineulagam
