ஒரே இரவில் சருமத்தை அழகாக மாற்றும் கிரீம்கள்! நாட்டு மக்களுக்கு அவசர அறிவிப்பு (Video)
இணையங்களில் பரவலாக விற்கப்படும் சருமத்தை வெண்மையாக்கும் முகப்பூச்சுக்கள் மற்றும் பிற பொருட்கள் குறித்து பொது மக்களுக்கு தோல் மருத்துவர் இந்திரா கஹவிட்ட அவசர எச்சரிக்கையொன்றை விடுத்துள்ளார்.
ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இந்த விடயத்தை கூறியுள்ளார்.
மேலும் தெரிவிக்கையில், பல்வேறு இணையதளங்களில் நூற்றுக்கணக்கான சருமத்தை வெண்மையாக்கும் பொருட்கள் கிடைக்கின்றன.
குறித்த கிரீம் என்ற முகப்பூச்சுக்கள் மற்றும் பொருட்களைப் பயன்படுத்திய பிறகு ஒரே இரவில் தங்கள் சருமம் அழகாக மாறும் என்று மக்கள் ஏமாற்றப்படுகிறார்கள்.
பதிவு செய்யப்பட்ட தயாரிப்புகள்
இந்த நிலையில் அவற்றில் பயன்படுத்தப்படும் பொருட்கள் மற்றும் தயாரிப்பு இலங்கையில் பதிவு செய்யப்பட்டுள்ளதா போன்ற விடயங்களை ஆராயுமாறு மருத்துவர் கஹவிட்ட வலியுறுத்தியுள்ளார்.
இதற்கிடையில் தோல் மருத்துவர் என்ற ரீதியில் ஒரே இரவில் சருமத்தை அழகாக மாற்றும் எந்தவொரு பொருளையும் தாம் பரிந்துரைக்கவில்லை.
எனினும் எவராவது, தனது தோலில் ஏதேனும் மாற்றங்களைச் செய்ய விரும்பினால், அது படிப்படியாகவும் முறையாகவும் செய்யப்பட வேண்டும் என்றும் சுட்டிக்காட்டியுள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |

Jurassic World Rebirth 13 நாட்களில் இத்தனை ஆயிரம் கோடிகள் வசூலா, இதை அழிக்கவே முடியாது போல Cineulagam

படுக்கையில் நெப்போலியன் மகன்... எலும்பும் தோலுமாக மாறியதற்கு என்ன காரணம்? நேரில் சந்தித்த பிரபலம் Manithan
