உலகளாவிய ரீதியில் சிறந்த சுற்றுலா நாடுகளில் ஒன்றாக இலங்கை தெரிவு
உலகளாவிய ரீதியில் சுற்றுலாப் பயணிகளுக்கு குறைந்த விலையில் விடுமுறையை கழிக்க கூடிய 13 நாடுகளில் ஒன்றாக இலங்கை பெயரிடப்பட்டுள்ளது.
FOX நியூஸ் தொகுத்துள்ள மலிவான விடுமுறை இடங்களின் பட்டியல், இயற்கை எழில் கொஞ்சும் இடங்களை அனுபவிப்பதற்கான சிறந்த இடமாக இலங்கையை விவரித்துள்ளது.
யானைகள் போன்ற பூர்வீக வனவிலங்குகளுடன் நெருங்கி பழகவும், கடற்கரைக்கு சென்று சூரிய உதயத்தை பார்க்கும் வாய்ப்பும் கிடைக்கும் என்று விவரிக்கப்பட்டுள்ளது.
சுற்றுலாத்துறை
இலங்கையில் தங்குமிடத்திற்கு 20 முதல் 40 டொலர் வரை செலவாகும் எனவும் சராசரியாக ஒரு நேர உணவுக்கு 5 டொலர் செலவாகும் எனவும் அந்த அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

இந்தியா, தாய்லாந்து, இந்தோனேசியா, மலேசியா, கிரீஸ் மற்றும் எகிப்து ஆகிய நாடுகளுடன், இலங்கையும் மலிவான விடுமுறை இடமாக பெயரிடப்பட்டுள்ளது.
திறப்பு விழாவில் பெரிய பிரச்சனை.. போட்டுக்கொடுத்த ஞானம்! எதிர்நீச்சல் தொடர்கிறது இன்றைய ப்ரோமோ Cineulagam
2026: 12 ராசிகளுக்குமான சிறப்பு பலன்கள்... 4 பிரபல ஜோதிட நிபுணர்களின் கணிப்பு ஒரே பார்வையில்! Manithan