டொலர் பெறுமதி குறைந்ததன் பலன்கள் மக்களுக்கு கிட்டவில்லை: தொழில் முயற்சியாளர் சங்கம்
டொலர் பெறுமதியில் வீழ்ச்சி ஏற்பட்டுள்ள போதும், அதன் பலாபலன்கள் இன்னும் மக்களுக்கு கிட்டவில்லை என தொழில் முயற்சியாளர் சங்கம் தெரிவித்துள்ளது.
இது தொடர்பாக இலங்கை ஐக்கிய தொழில் முயற்சியாளர் சங்கத்தின் தலைவி டானியா எஸ்.அபேசிங்க ஊடகங்களுக்கு அறிக்கையொன்றை அனுப்பியுள்ளார்.
டொலரின் பெறுமதி வீழ்ச்சி
குறித்த அறிக்கையில் மேலும், கடந்த காலங்களில் இலங்கை ரூபாவுக்கு எதிரான டொலரின் பெறுமதியில் குறிப்பிடத்தக்க வீழ்ச்சி ஏற்பட்டுள்ளது.
ஆயினும் அதற்கேற்ப தொழிற்சாலைகளுக்குத் தேவையான மூலப் பொருட்களின் விலைகளில் மாற்றம் ஏற்படவில்லை.
மறுபுறத்தில் பொதுமக்களின் பயன்பாட்டுப் பொருட்களுக்கான விலையும் குறையவில்லை.
அந்த வகையில் டொலரின் பெறுமதியில் வீழ்ச்சி ஏற்பட்டுள்ள போதும், அதன் பலாபலன் பொதுமக்களுக்கு இதுவரை கிடைக்கவில்லை என்றும் அவர் தொடர்ந்தும் சுட்டிக்காட்டியுள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |