400 - 450 ரூபாவிற்கு செல்லும் டொலரின் பெறுமதி..! இலங்கையில் இறக்குமதியின் போது ஏற்படும் மாற்றம்
நாட்டில் கடந்த சில நாட்களாக டொலருக்கு நிகரான ரூபாவின் பெறுமதியில் குறிப்பிடத்தக்க உயர்வு ஏற்பட்டுள்ள போதும், டொலர் ஒன்றின் பெறுமதி 400 - 450 ரூபாவிற்கு செல்லும் சாத்தியம் இருப்பதாக குளோபல் ஸ்ரீலங்கா மன்றத்தின் தலைவர் மஞ்சு நிஷங்க தெரிவித்துள்ளார்.
சீர்குலைந்த நிலையிலுள்ள பொருளாதாரம் சற்று முன்னேறிக் காணப்படுவதாகவும், அதனை மீட்டெடுத்து சுதந்திரமாக இலங்கைக்கு வெளிநாட்டு பொருட்களை இறக்குமதி செய்வது ஆரம்பிக்கப்பட்டதன் பின்னரே டொலரின் பெறுமதி உயரும் நிலைமை ஏற்படும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
பொருளாதாரம் சிதைந்த நிலையில் தற்போது டொலர் ஒன்றின் விலை 300 ரூபாவாக காணப்படுவதாகவும், அது மீளும் போது டொலரின் பெறுமதி அதிகரிக்கும் எனவும் அவர் எச்சரித்துள்ளார்.
இது உள்ளிட்ட இன்னும் பல முக்கிய செய்திகளை உள்ளடக்கி வருகிறது இன்றைய தினத்திற்கான பத்திரிகைகளின் கண்ணோட்டம்,
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |

பாக்., சீனாவுக்கு கவலையளிக்கும் செய்தி - Tejas MK1 போர் விமானங்களை மேம்படுத்தும் இந்தியா News Lankasri
