அவதானமாக இருங்கள்.. பொலிஸார் பொதுமக்களுக்கு விடுத்துள்ள எச்சரிக்கை
செயற்கை நுண்ணறிவு (AI) மூலம் உருவாக்கப்படும் 'டீப்ஃபேக்' (Deepfake) தொழில்நுட்ப மோசடிகள் குறித்து இலங்கை பொலிஸார் பொதுமக்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
சமூக வலைத்தளங்களில் உள்ள புகைப்படங்கள் மற்றும் குறுகிய குரல் பதிவுகளைப் பயன்படுத்தி, உறவினர்கள் அல்லது நண்பர்களின் குரல் மற்றும் முகப்போலிகளை (Deepfake Videos & Voice Recordings) போலிச் சித்தரிப்பாக உருவாக்குகி மோசடி செய்பவர்கள் பணத்தைக் கோருகின்றனர்.
தனிப்பட்ட தகவல்கள்
எனவே சந்தேகத்திற்குரிய அழைப்புகள் அல்லது காணொளி அழைப்புகள் வந்தால், உடனடியாகப் பணத்தையோ அல்லது வங்கிக் கணக்கு விபரங்களையோ வழங்க வேண்டாம்.

அத்துடன், சம்பந்தப்பட்ட நபரை வேறு ஒரு நம்பகமான தொடர்பு ஊடகம் (Phone Call / Direct Contact) மூலம் தொடர்பு கொண்டு உறுதிப்படுத்திக் கொள்ளுமாறும் பொலிசார் அறிவுறுத்தியுள்ளனர்.
கடவுச்சொற்கள் (Passwords) மற்றும் OTP எண்களை எவருடனும் பகிர்ந்து கொள்ள வேண்டாம் என்றும் அவர்கள் வலியுறுத்தியுள்ளனர்.
20ஆம் ஆண்டு திருமணக் கொண்டாட்டத்தில் சூர்யாவின் வித்தியாசமான ஸ்டைல்! பின்னணி என்ன தெரியுமா? Manithan