பழக்க தோஷத்தில் நாடாளுமன்றில் கனம் நீதிபதி அவர்களே என விளித்த சாமர சம்பத்
நாடாளுமன்றில் இன்றைய தினம் உரை நிகழ்த்திய போது நாடாளுமன்ற உறுப்பினர் சாமர சம்பத் தசநாயக்க இரண்டு தடவைகள் கனம் நீதிபதி அவர்களே என பிரதி சபாநாயகரை விளித்திருந்தார்.
இதன்போது அருகாமையில் இருந்த உறுப்பினர்கள் இது நீதிமன்றம் அல்ல நாடாளுமன்றம் என கூறியவர்கள் தொடர்ந்து தாம் அடிக்கடி நீதிமன்றம் சென்று செல்வதனால் பழக்க தோஷத்தில் நீதிபதி அவர்களே என கூறியதாக அவர் தெரிவித்திருந்தார்.
கனம் நீதிபதி அவர்களே..
தாம் அடிக்கடி நீதிமன்றில் ஏறி இறங்குவதால் பழக்க தோஷத்தில் பிரதி சபாநாயகரை நீதிபதி அவர்களே என விளித்ததாக தெரிவித்துள்ளார்.

மேலும் ஆளும் கட்சி சட்டத்தை சமமாக அமுல்படுத்துவதாக பல்வேறு இடங்களில் கூறிய போதிலும் நடைமுறையில் அவ்வாறு இல்லை என அவர் குற்றம் சுமத்தியுள்ளார்.
அண்மையில் ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க சட்டம் அனைவருக்கும் சமமானது எனக் கூறிய போதிலும் உண்மையில் அவ்வாறு அரசாங்கம் நடந்து கொள்ளவில்லை என அவர் குற்றம் சுமத்தியுள்ளார்.
மின்வலு மற்றும் எரிசக்தித்துறை முன்னாள் அமைச்சர் குமார ஜயக்கொடி அவர்களுக்கு எதிரான வழக்கு கிடப்பில் போடப்பட்டுள்ளதாகவும் வர்த்தக விவகார அமைச்சர் வசந்த சமரசிங்கவிற்கு எதிராக வீடு ஒன்றை அபகரித்தமை குறித்த வழக்கும் கிடப்பில் போடப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
இவ்வாறு ஆளும் தரப்பினருக்கு சட்டம் ஒருவிதமாகவும் எதிர்கட்சியினருக்கு வேறொரு விதமாகவும் அமல்படுத்தப்படுவதாக அவர் சட்டப்பிரிவுகளை சுட்டிக்காட்டி கருத்து வெளியிட்டிருந்தார்.
குறிப்பாக நாமல் ராஜபக்ஷ தாம் உள்ளிட்ட சிலர் தொடர்ச்சியாக நீதிமன்ற வழக்கு விசாரணைகளுக்கு உட்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டு உள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.
சிறைச்சாலையில் விளக்க மறியலில் வைக்கப்பட்டுள்ள நிலையில் சாமர சம்பத் தசாநாயக்க இன்றைய தினம் நாடாளுமன்றில் உரையாற்றியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.