பௌத்த துறவி ஆடையுடன் நீதிமன்றத்தில் முன்னிலையாகும் ஞானசார தேரர்
திருத்தப்பட்ட புதிய சட்ட விதிமுறைகளின்படி, எதிர்வரும் 23-ஆம் திகதி ஞானசார தேரர் பௌத்த துறவி ஆடையுடன் நீதிமன்றத்தில் முன்னிலையாவார் என்று புத்தசாசன, சமய மற்றும் கலாசார அலுவல்கள் அமைச்சர் சுனில் செனவி தெரிவித்துள்ளார்.
கொழும்பில் நேற்று (21) நடைபெற்ற விசேட ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும்போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.
ஞானசார தேரருக்கு சிறைத்தண்டனை
சட்ட நடவடிக்கைகளின் போது, மத அடையாளம் தொடர்பான உரிய நடைமுறைகள் சரியாகப் பின்பற்றப்படுவதை உறுதி செய்வதற்கான நடவடிக்கைகள் ஏற்கனவே எடுக்கப்பட்டு வருகின்றன.

ஞானசார தேரருக்கு எதிரான சிறைத்தண்டனை உத்தரவை தொடர்ந்து, அவர் சார்ந்திருக்கும் பிரிவின் மகாநாயக்க தேரருக்கு பௌத்த விவகார ஆணையாளர் நாயகம் இது தொடர்பாக எழுத்து மூலம் அறிவித்துள்ளார்.
அத்துடன், அவரை நீதிமன்றில் முன்னிலைப்படுத்தும் நடைமுறைகள் குறித்து ஆலோசனைகளையும் கோரியுள்ளார்.
மகாநாயக்க தேரரிடமிருந்து பெறப்பட்ட அறிவுறுத்தல்கள் மற்றும் வழிகாட்டுதல்களின் அடிப்படையில், இது தொடர்பான விடயம் குறித்து சிறைச்சாலைகள் ஆணையர் நாயகத்திற்குத் தெரிவிக்க புத்தசாசன ஆணையர் நாயகம் எதிர்பார்ப்பதாக அமைச்சர் மேலும் தெரிவித்துள்ளார்.
பிக்குகள் சிறை செல்லும் சூழல்
சிறைச்சாலைகள் கட்டளைச் சட்டத்தின் 356 மற்றும் 550 ஆகிய பிரிவுகளில் மேற்கொள்ளப்பட்டுள்ள இத்திருத்தங்களின்படி, சிறைவாசம் அனுபவிக்கும் பிக்கு ஒருவரின் ஆடை தொடர்பாக முடிவெடுக்கும் அதிகாரம் மாற்றியமைக்கப்பட்டுள்ளது.

அரசாங்கத்தினால் நியமிக்கப்பட்ட ஐவர் அடங்கிய குழுவின் மூலம், இரண்டு வாரங்களுக்குள் முடிக்கப்பட வேண்டிய இச்சட்டத் திருத்த நடவடிக்கை வெறும் ஆறு நாட்களில் விரைவாகச் செய்து முடிக்கப்பட்டுள்ளது.
இத்தீர்மானம் ஒரு நற்பெயரைக் காக்கும் நடவடிக்கையாகவும், எதிர்காலத்தில் பிக்குகள் சிறை செல்லும் சூழல்களில் சங்க சபையின் வழிகாட்டலைப் பெற்று முறையான வழிமுறைகளைப் பின்பற்றுவதற்கும் வழிவகுக்கும் என்றும் தெரிவித்துள்ளார்.
you may like this video
மனைவியுடன் ஏற்பட்ட தகராறு: 1700 அடி மலையில் இருந்து குதித்து உயிரை மாய்த்துக் கொண்ட கணவன் News Lankasri