கரையோரப் பிரதேசங்களை பாதுகாக்கும் நோக்கில் இரு இளைஞர்களின் துவிச்சக்கரவண்டி பயணம் (Video)
மட்டக்களப்பில் இரு இளைஞர்கள் இணைந்து இலங்கையின் கரையோரப் பிரதேசங்களை பாதுகாப்பது தொடர்பில் துவிச்சக்கர வண்டியில் பயணம் செய்து விழிப்புணர்வை ஏற்படுத்தும் நோக்கில் தங்களது பயணத்தை ஆரம்பித்துள்ளனர்.
கடந்த முதலாம் திகதி மட்டக்களப்பு கல்லடி பாலத்திலிருந்து தமது பயணத்தை இளைஞர்கள் ஆரம்பித்துள்ளனர்.
பட்டிருப்பு மத்திய மகா வித்தியாலயம் ( தேசிய பாடசாலை ) களுவாஞ்சிகுடி பழைய மாணவரான அனாமிகன் குமாரசிங்கம் மற்றும் மட்டக்களப்பு புனித மைக்கல் கல்லூரி பழைய மாணவரான சஞ்ஜீவன் அமலநாதன் ஆகிய இரு இளைஞர்களே இலங்கையின் கரையோரப் பிரதேசங்களை துவிச்சக்கர வண்டியில் பயணம் செய்து விழிப்புணர்வை ஏற்படுத்தும் நோக்கில் தமது பயணத்தை மேற்கொண்டுள்ளனர்.
ஓசோன் ரைட்
இரண்டு சைக்கிள் ஓட்டிகளும் “ஓசோன் ரைட்” எனும் கருப்பொருளினை மையமாகக் கொண்டு பயணிக்கிறார்கள்.
கடல் சுற்றுப்புறச் சூழலையும் கடல் வளத்தையும் பாதுகாப்பதற்காக சமூகத்தில் பல்வேறு வேலைத்திட்டங்களை உருவாக்கி செயல்படுத்தும் நோக்கில் இவர்கள் தங்களது பயணத்தை ஆரம்பித்துள்ளனர் என தெரிவிக்கப்படுகின்றது.
11 நாட்கள் பயணம்
இலங்கையின் கரையோர மாவட்டங்களான மட்டக்களப்பு, திருகோணமலை, முல்லைத்தீவு, யாழ்ப்பாணம், புத்தளம், நீர்கொழும்பு, கிக்கடுவை, ஹம்பாந்தோட்டை, பொத்துவில் ஊடாக மீண்டும் மட்டக்களப்பை வந்தடையும் இப்பயணம் மொத்தம் 1,300 கிலோ மீட்டர்கள் 11 நாட்கள் கொண்டதாகும்.















ட்ரம்ப் அழுத்தத்தால் ஐரோப்பியம் ஒன்றியம் எடுக்கவிருக்கும் அதிரடி முடிவு: ரஷ்யாவிற்கு பின்னடைவு News Lankasri

பிரித்தானியாவின் One in, one out திட்டத்தை கேலி செய்யும் வகையில் நேற்று நிகழ்ந்த விடயம் News Lankasri
