மட்டக்களப்பு - சித்தாண்டியில் மகளிர் இல்லமொன்றின் முகாமையாளர் திடீர் மரணம் (Photo)
மட்டக்களப்பு - சித்தாண்டி யோகசுவாமி சைவ மகளிர் இல்லத்தில் நடைபெற்ற நிகழ்வொன்றில் உரையாற்றிக் கொண்டிருந்த இல்ல முகாமையாளர் திடீரென மயக்கமுற்ற நிலையில் உயிரிழந்துள்ளார்.
குறித்த நிகழ்வு நேற்று (25.09.2023) மாலை நடைபெற்றுள்ள நிலையில் இதில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
இதன்போது உயிரிழந்தவர் மாவடிவேம்பைச் சேர்ந்த 63 வயதுடைய சிவசம்பு பாக்கியராசா என தெரியவருகிறது.

திடீர் மரணம்
புலம்பெயர் நாடொன்றில் வசிக்கும் நன்கொடையாளரால் இல்லத்திற்கு 2 இலட்சம் ரூபா பெறுமதியான அரிசி மூட்டைகள் வழங்கப்பட்டுள்ளன.

இந்த அரிசி மூட்டைகளை கையளிக்கும் நிகழ்வில் உதவி புரிந்த நபருக்கு நன்றி கூறி உரையாற்றும் போது திடீரென அவர் மயக்கமுற்றுள்ள நிலையில் அவரை வைத்தியசாலைக்கு எடுத்துச் செல்லும் வழியில் மரணமடைந்துள்ளார்.
சடலம் சந்திவெளி பிரதேச வைத்தியசாலையில் வைக்கப்பட்டு மரண விசாரணைகளின் பின்னர் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டதுடன் சந்திவெளி பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.
குறித்த முகாமையாளர் யோகசுவாமி சைவ மகளிர் இல்லத்தின் வளர்சிக்காக நீண்டகாலமாக சேவையாற்றியிருந்த நிலையில் அவரது உயிரிழப்பு அப்பிரதேசத்தையே சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |
ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து புலம்பெயர்ந்தோரை வெளியேற்ற ஒப்பந்தமிடும் ஐந்து ஐரோப்பிய நாடுகள் News Lankasri
டன் கணக்கிலானத் தங்கத்தை அமெரிக்காவிலிருந்து வெளியேற்றும் ஐரோப்பிய நாடுகள்: என்ன காரணம் News Lankasri