80க்கும் மேற்பட்ட பசுக்களை இழந்த மயிலத்தமடு பண்ணையாளர்கள்
மட்டக்களப்பு மயிலத்தமடு,மாதவனை கால்நடை பண்ணையாளர்கள் இதுவரையில் 80க்கும் மேற்பட்ட பசுக்களை இழந்துள்ளதாக அந்த சங்கத்தின் தலைவர் சி.நிமலன் தெரிவித்துள்ளார்.
தமது மேய்ச்சல் தரை காணியை மீட்டுத்தருமாறு கோரி 82வது நாளாகவும் கால்நடை பண்ணையாளர்கள் போராட்டம் நடாத்திவருகின்றனர். இது தொடர்பில் பண்ணையாளர்கள் மேலும் தெரிவித்துள்ளதாவது,
ஜனாதிபதி மற்றும் மட்டக்களப்பு மாவட்டத்தில் உள்ள அரச சார்பான அரசியல்வாதிகள் தமது பிரச்சினைகள் குறித்து மௌனிகளாக இருந்துவருவது கவலைக்குரியது.
நீதிமன்ற கட்டளையொன்று சட்ட விரோத குடியேற்றக்காரர்களை அகற்றுமாறு வழங்கப்பட்டுள்ளபோதிலும் அந்த கட்டளையினை நடைமுறைப்படுத்த பொலிஸாரும் அதிகாரிகளும் நடவடிக்கையெடுக்கவில்லை.

விடுதலைப் புலிகளின் தலைவர் ஒரு நேர்மையான தலைவர்: சர்ச்சையை ஏற்படுத்திய காணொளிக்கு கமால் குணரத்ன பதிலடி
சுட்ட விரோத குடியேற்றக்காரர்களை கட்டுப்படுத்தவும் பண்ணையாளர்களை பாதுகாப்பதற்காகவும் அமைக்கப்பட்டுள்ள பொலிஸ் காவலரன் அங்குள்ள சட்ட விரோத குடியேற்றக்காரர்களை பாதுகாக்கும் செயற்பாடுகளையே முன்னெடுக்கின்றன.
குறிப்பாக கரடியனாறு பொலிஸ் நிலையத்திற்கு வந்துமுறைப்பாடுகளை செய்தால் பொலிஸார் வந்துபார்த்துவிட்டு செல்கின்றார்களே தவிர தாக்குதல் நடத்துவோருக்கு எதிராக எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என தெரிவித்துள்ளனர்.
மேலும் புண்ணையாளர்கள் தொடர்ச்சியாக பாதிக்கப்படுவதன் காரணமாக அவர்கள் பொருளாதார ரீதியாக கடும் பாதிப்புகளை எதிர்நோக்குவதாகவும் கவலை தெரிவித்துள்ளனர்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |

வெறும் வயிற்றில் சுடுநீர்+ நெய் குடிக்கிறீர்களா? 20 நிமிடத்துக்குப் பின் நிகழும் 7 மாற்றங்கள் Manithan
